• Apr 15 2026

மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு தப்பியோடிய கணவன்

Chithra / Mar 2nd 2026, 11:45 am
image



புத்தளம், மாரவில பகுதியில் தனது மனைவியைக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய கணவனைக் கைது செய்வதற்காக  பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


இவ்வாறு உயிரிழந்தவர் மாரவில, கட்டுநேரிய - பேன்கட பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய பெண் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த வீட்டிலொன்றில் இடம்பெற்ற கொலை தொடர்பில் நேற்று இரவு 11.40 மணியளவில் பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது. 


அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, உயிரிழந்த பெண்ணின் சடலம் வீட்டின் படுக்கையறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.


கணவன் தனது மனைவியின் கழுத்தைக் கத்தியால் அறுத்துக் கொலை செய்துள்ளதாகவும், சந்தேகநபரான கணவன் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பியோடியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இடம்பெறவுள்ளதுடன், மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு தப்பியோடிய கணவன் புத்தளம், மாரவில பகுதியில் தனது மனைவியைக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய கணவனைக் கைது செய்வதற்காக  பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.இவ்வாறு உயிரிழந்தவர் மாரவில, கட்டுநேரிய - பேன்கட பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய பெண் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த வீட்டிலொன்றில் இடம்பெற்ற கொலை தொடர்பில் நேற்று இரவு 11.40 மணியளவில் பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது. அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, உயிரிழந்த பெண்ணின் சடலம் வீட்டின் படுக்கையறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.கணவன் தனது மனைவியின் கழுத்தைக் கத்தியால் அறுத்துக் கொலை செய்துள்ளதாகவும், சந்தேகநபரான கணவன் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பியோடியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இடம்பெறவுள்ளதுடன், மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement