• Jul 15 2026

புத்தங்கல சரணாலயப் பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

shanu / Jul 13th 2026, 9:33 pm
image

அம்பாறை  புத்தங்கல சரணாலயப் பகுதியில் அமைந்துள்ள அரசாங்கத்துக்குச் சொந்தமான காணி ஒன்றில்  சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியை வைத்திருந்த நபர்  அம்பாறை வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளால்   கைது செய்யப்பட்டுள்ளார்.


காட்டு விலங்குகளை வேட்டையாடும் நோக்கில்  குறித்த நபர் சட்டவிரோதத் துப்பாக்கியுடன் நடமாடுவதாக வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கை திங்கட்கிழமை(12) மாலை  மேற்கொள்ளப்பட்டுள்ளது.


 கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட சட்டவிரோதத் துப்பாக்கியை மீட்டெடுத்துள்ள அதிகாரிகள்  சந்தேக நபரை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில்  இன்று (13) ஆஜர்படுத்த உள்ளதாக வனவிலங்குத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


 அம்பாறை வனவிலங்குத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரிகளின் வழிகாட்டலின் கீழ் வனவிலங்கு கள பாதுகாவலர் ஜி.என். டி சில்வா, வனவிலங்குப் பாதுகாவலர்  ஜெயந்தன்,இ வனவிலங்குப் பாதுகாவலர் கே.எம்.எச்.பி. சஞ்சீவ  , அதிகாரிகளே இந்தச் சந்தேக நபரைச் சுற்றிவளைத்துக் கைது செய்துள்ளனர்.


இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.

புத்தங்கல சரணாலயப் பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது அம்பாறை  புத்தங்கல சரணாலயப் பகுதியில் அமைந்துள்ள அரசாங்கத்துக்குச் சொந்தமான காணி ஒன்றில்  சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியை வைத்திருந்த நபர்  அம்பாறை வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளால்   கைது செய்யப்பட்டுள்ளார்.காட்டு விலங்குகளை வேட்டையாடும் நோக்கில்  குறித்த நபர் சட்டவிரோதத் துப்பாக்கியுடன் நடமாடுவதாக வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கை திங்கட்கிழமை(12) மாலை  மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட சட்டவிரோதத் துப்பாக்கியை மீட்டெடுத்துள்ள அதிகாரிகள்  சந்தேக நபரை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில்  இன்று (13) ஆஜர்படுத்த உள்ளதாக வனவிலங்குத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அம்பாறை வனவிலங்குத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரிகளின் வழிகாட்டலின் கீழ் வனவிலங்கு கள பாதுகாவலர் ஜி.என். டி சில்வா, வனவிலங்குப் பாதுகாவலர்  ஜெயந்தன்,இ வனவிலங்குப் பாதுகாவலர் கே.எம்.எச்.பி. சஞ்சீவ  , அதிகாரிகளே இந்தச் சந்தேக நபரைச் சுற்றிவளைத்துக் கைது செய்துள்ளனர்.இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement