• Jun 05 2025

மக்ரோனின் மெழுகுச் சிலை திருட்டு

Thansita / Jun 3rd 2025, 6:37 pm
image

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள அருங்காட்சியகத்திலிருந்து இம்மானுவல் மக்ரோனின் (Emmanuel Macron) மெழுகுச் சிலையை சமூக ஆர்வலர்கள் திருடிச் சென்றனர்.

Greenpeace அமைப்பைச் சேர்ந்த அவர்கள் அந்தச் சிலையை ரஷ்யத் தூதரகத்தின் முன் வைத்தனர்.ரஷ்யாவுடனான பிரான்சின் பொருளியல் உறவைக் குறைகூறி அவர்கள் அவ்வாறு செய்தனர்.

இரு பெண்களும் ஒரு ஆடவரும் சுற்றுப் பயணிகளைப்போல கிரவின் அருங்காட்சியகத்தினுள் நுழைந்தனர்.

உள்ளே சென்றதும் ஊழியர்கள் போல் ஆடை மாற்றிக்கொண்ட அவர்கள் மெழுகுச் சிலையை அவசர நுழைவாயில் வழி வெளியே எடுத்துச் சென்றனர்.

அந்த மெழுகுச் சிலையின் மதிப்பு சுமார் 40,000 யூரோ.

சிலை எந்தச் சேதமுமின்றி திருப்பிக் கொடுக்கப்படும் என்று ஆர்வலர்கள் அருங்காட்சியகத்திடம் தெரிவித்தனர்.

மக்ரோன் உக்ரேனுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்; ஆனால்ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்ய பிரெஞ்சு நிறுவனங்களை ஊக்குவிக்கிறார் என்று அவர்கள் குறைகூறினர்.


மக்ரோனின் மெழுகுச் சிலை திருட்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள அருங்காட்சியகத்திலிருந்து இம்மானுவல் மக்ரோனின் (Emmanuel Macron) மெழுகுச் சிலையை சமூக ஆர்வலர்கள் திருடிச் சென்றனர்.Greenpeace அமைப்பைச் சேர்ந்த அவர்கள் அந்தச் சிலையை ரஷ்யத் தூதரகத்தின் முன் வைத்தனர்.ரஷ்யாவுடனான பிரான்சின் பொருளியல் உறவைக் குறைகூறி அவர்கள் அவ்வாறு செய்தனர்.இரு பெண்களும் ஒரு ஆடவரும் சுற்றுப் பயணிகளைப்போல கிரவின் அருங்காட்சியகத்தினுள் நுழைந்தனர்.உள்ளே சென்றதும் ஊழியர்கள் போல் ஆடை மாற்றிக்கொண்ட அவர்கள் மெழுகுச் சிலையை அவசர நுழைவாயில் வழி வெளியே எடுத்துச் சென்றனர்.அந்த மெழுகுச் சிலையின் மதிப்பு சுமார் 40,000 யூரோ.சிலை எந்தச் சேதமுமின்றி திருப்பிக் கொடுக்கப்படும் என்று ஆர்வலர்கள் அருங்காட்சியகத்திடம் தெரிவித்தனர்.மக்ரோன் உக்ரேனுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்; ஆனால்ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்ய பிரெஞ்சு நிறுவனங்களை ஊக்குவிக்கிறார் என்று அவர்கள் குறைகூறினர்.

Advertisement

Advertisement

Advertisement