• Jul 25 2025

மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளிய லொறி; கர்ப்பிணிப் பெண் பரிதாப மரணம்!

Chithra / Aug 7th 2024, 12:39 pm
image


மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொழும்பு - காலி வீதியில் இடம்பெற்ற விபத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மொரட்டுவை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று  செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

பாணந்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த லொறி ஒன்று அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த கர்ப்பிணிப் பெண்ணொருவரும், சிறுமியொருவரும் படுகாயமடைந்துள்ள நிலையில், பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ளார்.

வாழைத்தோட்டம் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய கர்ப்பிணிப் பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளிய லொறி; கர்ப்பிணிப் பெண் பரிதாப மரணம் மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொழும்பு - காலி வீதியில் இடம்பெற்ற விபத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மொரட்டுவை பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்து நேற்று  செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.பாணந்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த லொறி ஒன்று அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த கர்ப்பிணிப் பெண்ணொருவரும், சிறுமியொருவரும் படுகாயமடைந்துள்ள நிலையில், பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ளார்.வாழைத்தோட்டம் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய கர்ப்பிணிப் பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.இதனையடுத்து, லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now