• May 12 2025

உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் அநுர அரசுக்கு ஒரு சிவப்பு எச்சரிக்கை! - குமார் குணரத்னம் சுட்டிக்காட்டு

Chithra / May 12th 2025, 8:59 am
image


உள்ளூராட்சி மன்ற தேர்தல் பெறுபேறுகள் மூலம் மக்கள் அரசாங்கத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். என முன்னிலை சோசலி கட்சியின் செயலாளர் குமார் குணரத்னம் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

தேர்தல் பெறுபேறுகளை பார்க்கும்போது மக்கள் எமது கோரிக்கைக்கு ஓரளவு செவிவாய்த்திருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.

அரசாங்கம் கடந்த காலங்களில் தேர்தல் மேடைகளில் தெரிவித்த விடயங்களை மறந்து புதிய தாராளவாத கொள்கையில் வேகமாக பயணித்துக்கொண்டிருக்கிறது. 

மக்கள் எதிர்கொண்டுள்ள வரி சுமையை குறைப்பதாக தெரிவித்த வாக்குறுதியை மறந்து நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கமைய அத்தியாவசிய உணவு பொருட்களின் விலையை மேலும் அதிகரித்துள்ளது. 

பாடசாலை உபகரணங்கள் மற்றும் சுகாதார உபகரணங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரி ஒரு சதமேனும் குறைக்கவில்லை.

மக்கள் விராேதமாக நாட்டின் பொருளாதார சுதந்திரத்தை இந்தியாவுக்கு காட்டிக்கொடுக்கும் பல ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டிருக்கிறது. அந்த ஒப்பந்தங்களை இதுவரை நாட்டுக்கு வெளிப்படுத்தவில்லை.

இவர்கள் அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் கடுமையாக எதிர்த்து வந்த அரச அடக்குமுறையை இன்று போராட்டக்காரர்கள் மீது கட்டவிழ்த்து வருகின்றனர். 

கடந்த பொதுத் தேர்தல் தேசிய மக்கள் பெற்ற வாக்குகளைவிட 23இலட்சம் வாக்குகள் இந்தமுறை குறைவடைந்துள்ளது.

எனவே இந்த தேர்தல்பெறுபேறு மூலம் மக்கள் வழங்கிய எச்சரிக்கையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டும். 

ரணில் விக்ரமசிங்க செயற்படுத்திய மக்களை அழுத்தத்துக்கு ஆளாக்கும் நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தையே அரசாங்கம் முன்னெடுத்து செல்வதால், அரசாங்கத்தின் மீது மக்களுக்கு விரக்தி ஏற்படுள்ளது. என்றார்.

உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் அநுர அரசுக்கு ஒரு சிவப்பு எச்சரிக்கை - குமார் குணரத்னம் சுட்டிக்காட்டு உள்ளூராட்சி மன்ற தேர்தல் பெறுபேறுகள் மூலம் மக்கள் அரசாங்கத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். என முன்னிலை சோசலி கட்சியின் செயலாளர் குமார் குணரத்னம் தெரிவித்தார்.கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.தேர்தல் பெறுபேறுகளை பார்க்கும்போது மக்கள் எமது கோரிக்கைக்கு ஓரளவு செவிவாய்த்திருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.அரசாங்கம் கடந்த காலங்களில் தேர்தல் மேடைகளில் தெரிவித்த விடயங்களை மறந்து புதிய தாராளவாத கொள்கையில் வேகமாக பயணித்துக்கொண்டிருக்கிறது. மக்கள் எதிர்கொண்டுள்ள வரி சுமையை குறைப்பதாக தெரிவித்த வாக்குறுதியை மறந்து நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கமைய அத்தியாவசிய உணவு பொருட்களின் விலையை மேலும் அதிகரித்துள்ளது. பாடசாலை உபகரணங்கள் மற்றும் சுகாதார உபகரணங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரி ஒரு சதமேனும் குறைக்கவில்லை.மக்கள் விராேதமாக நாட்டின் பொருளாதார சுதந்திரத்தை இந்தியாவுக்கு காட்டிக்கொடுக்கும் பல ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டிருக்கிறது. அந்த ஒப்பந்தங்களை இதுவரை நாட்டுக்கு வெளிப்படுத்தவில்லை.இவர்கள் அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் கடுமையாக எதிர்த்து வந்த அரச அடக்குமுறையை இன்று போராட்டக்காரர்கள் மீது கட்டவிழ்த்து வருகின்றனர். கடந்த பொதுத் தேர்தல் தேசிய மக்கள் பெற்ற வாக்குகளைவிட 23இலட்சம் வாக்குகள் இந்தமுறை குறைவடைந்துள்ளது.எனவே இந்த தேர்தல்பெறுபேறு மூலம் மக்கள் வழங்கிய எச்சரிக்கையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டும். ரணில் விக்ரமசிங்க செயற்படுத்திய மக்களை அழுத்தத்துக்கு ஆளாக்கும் நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தையே அரசாங்கம் முன்னெடுத்து செல்வதால், அரசாங்கத்தின் மீது மக்களுக்கு விரக்தி ஏற்படுள்ளது. என்றார்.

Advertisement

Advertisement

Advertisement