பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 17 ஆம் திகதி முதல் அஞ்சல் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, கட்டுநாயக்க விமான நிலைய களஞ்சியசாலையில் வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட கடிதங்கள் மற்றும் பொதிகள் தேங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
தேங்கிக்கிடக்கும் கடிதங்கள்; கடமைகளுக்கு வராத தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 19 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 17 ஆம் திகதி முதல் அஞ்சல் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை, கட்டுநாயக்க விமான நிலைய களஞ்சியசாலையில் வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட கடிதங்கள் மற்றும் பொதிகள் தேங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.