நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் வேட்பாளர்களின் பிரச்சார நிதி விவரங்கள் இன்று நள்ளிரவுக்கு முன் சமர்ப்பிக்கப்படாவிட்டால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதில் தேசிய தேர்தல் ஆணைக்குழு உறுதியாக உள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தவகையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்ட 79,000க்கும் மேற்பட்ட வேட்பாளர்களின் பிரச்சார நிதி விவரங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்று (27) நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைகிறது.
மேலும் 2023 ஆம் ஆண்டு தேர்தல் செலவின ஒழுங்குமுறைச் சட்டம் எண்.3 இன் விதிகளின்படி அவற்றைச் சமர்ப்பிக்கத் தவறியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழி ஆணைக்குழுவிடம் இல்லை.
காலக்கெடுவுக்குப் பிறகு தங்கள் விவரங்களைச் சமர்ப்பிக்கத் தவறியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு அறிவிக்க தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும் என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக, தேர்தல் ஆணையர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, அனைத்து வேட்பாளர்கள், அவர்களது கட்சிச் செயலாளர்கள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் தலைவர்கள் தேர்தல் ஆணைக்குழுவின் இணையப் பக்கமான https://cf.elections.gov.lk/ இல் எளிதாகப் பதிவு செய்து தேர்தல் செலவு விவரங்களைப் பதிவேற்றலாம் என்று அறிவிக்கும் சுற்றறிக்கையை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் வேட்பாளர்கள் மீது நாளை முதல் சட்ட நடவடிக்கை. நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் வேட்பாளர்களின் பிரச்சார நிதி விவரங்கள் இன்று நள்ளிரவுக்கு முன் சமர்ப்பிக்கப்படாவிட்டால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதில் தேசிய தேர்தல் ஆணைக்குழு உறுதியாக உள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.அந்தவகையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்ட 79,000க்கும் மேற்பட்ட வேட்பாளர்களின் பிரச்சார நிதி விவரங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்று (27) நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைகிறது. மேலும் 2023 ஆம் ஆண்டு தேர்தல் செலவின ஒழுங்குமுறைச் சட்டம் எண்.3 இன் விதிகளின்படி அவற்றைச் சமர்ப்பிக்கத் தவறியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழி ஆணைக்குழுவிடம் இல்லை.காலக்கெடுவுக்குப் பிறகு தங்கள் விவரங்களைச் சமர்ப்பிக்கத் தவறியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு அறிவிக்க தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும் என்று அவர் தெரிவித்தார்.முன்னதாக, தேர்தல் ஆணையர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, அனைத்து வேட்பாளர்கள், அவர்களது கட்சிச் செயலாளர்கள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் தலைவர்கள் தேர்தல் ஆணைக்குழுவின் இணையப் பக்கமான https://cf.elections.gov.lk/ இல் எளிதாகப் பதிவு செய்து தேர்தல் செலவு விவரங்களைப் பதிவேற்றலாம் என்று அறிவிக்கும் சுற்றறிக்கையை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.