• Mar 15 2026

QR குறியீட்டை இப்படிதான் பெறலாம்! புதிய சிக்கல்களுக்கு இன்று தீர்வு!

Chithra / Mar 15th 2026, 11:28 am
image



நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் QR குறியீட்டு முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறை இன்று (15) முதல் அமுலுக்கு வரும் என வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. 


அதனடிப்படையில் QR குறியீட்டை எப்படி பெற்றுக்கொள்வது என்பது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 


ஏற்கனவே QR குறியீட்டிற்குப் பதிவு செய்தவர்கள்: 


வாகனத்தின் உரிமையாளர் அல்லது தொலைபேசி இலக்கத்தில் மாற்றம் ஏற்படவில்லை எனின், 2026.03.14 நள்ளிரவு முதல் http://https://fuelpass.gov.lk/என்ற இணையதளத்தில் உங்களுக்கான குறியீட்டைப் பதிவிறக்கம் (Download) செய்து கொள்ள முடியும்.


வாகனத்தின் உரிமையாளர் அல்லது தொலைபேசி இலக்கத்தில் மாற்றம் ஏற்பட்டிருப்பின், 2026.03.15 காலை 6.00 மணி முதல் https://fuelpass.gov.lk/ இணையதளத்தில் நீங்கள் மீண்டும் பதிவு செய்தல் வேண்டும்.


முன்னர் QR குறியீட்டிற்குப் பதிவு செய்யாதவர்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் (RMV) புதிதாகப் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள்:


2026.03.15 காலை 6.00 மணி முதல் https://fuelpass.gov.lk/இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்தல் வேண்டும்.


வாகனங்களுக்கான வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு (லீட்டரில்):


பேருந்துகள் : 60  

மோட்டார் சைக்கிள்கள்  : 5  

வேன்கள் : 40 

மோட்டார் வாகனங்கள் : 15 

மோட்டார் லொறிகள்: 200 

காணி வாகனங்கள் : 25

முச்சக்கர வண்டிகள்: 15 

விசேட தேவைக்கான வாகனங்கள் : 40 

குவாட்ரிசைக்கிள்கள் (Quadricycle): 5


நாட்டின் உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளைப் பேணுவதற்குத் தேவையான வாகனங்களுக்கு, உரிய நிறுவனங்களுடன் இணைந்து விசேட வேலைத்திட்டத்தின் கீழ் எரிபொருள் விநியோகிக்கப்படும்.


தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கான எரிபொருள், இலங்கை போக்குவரத்து சபை ஊடாக விநியோகிக்கப்படும் என வலுசக்தி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறைமை மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு விரைவான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


ஏற்கனவே QR குறியீட்டைப் பெற்றிருந்த மற்றும் தற்போதும் அதே வாகனம் மற்றும் அதே தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தும் நபர்கள், எவ்வித சிக்கலுமின்றி தமது புதிய QR குறியீட்டைப் புதுப்பித்துக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தமது வாகனங்கள் அல்லது தொலைபேசி இலக்கங்களை மாற்றியுள்ளவர்கள் மற்றும் புதிய வாகனங்களைக் கொள்வனவு செய்தவர்கள் எதிர்கொள்ளும் தொழில்நுட்ப ரீதியான பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை மிக விரைவாகத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


அத்தியாவசிய சேவைகள் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கான எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட விசேட விடயங்கள் தொடர்பில் இன்று (15) பிற்பகல் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன. இன்றைய தினத்திற்குள்ளேயே அவற்றுக்கான உரிய தீர்வுகளை வழங்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

QR குறியீட்டை இப்படிதான் பெறலாம் புதிய சிக்கல்களுக்கு இன்று தீர்வு நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் QR குறியீட்டு முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறை இன்று (15) முதல் அமுலுக்கு வரும் என வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. அதனடிப்படையில் QR குறியீட்டை எப்படி பெற்றுக்கொள்வது என்பது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே QR குறியீட்டிற்குப் பதிவு செய்தவர்கள்: வாகனத்தின் உரிமையாளர் அல்லது தொலைபேசி இலக்கத்தில் மாற்றம் ஏற்படவில்லை எனின், 2026.03.14 நள்ளிரவு முதல் http://https://fuelpass.gov.lk/என்ற இணையதளத்தில் உங்களுக்கான குறியீட்டைப் பதிவிறக்கம் (Download) செய்து கொள்ள முடியும்.வாகனத்தின் உரிமையாளர் அல்லது தொலைபேசி இலக்கத்தில் மாற்றம் ஏற்பட்டிருப்பின், 2026.03.15 காலை 6.00 மணி முதல் https://fuelpass.gov.lk/ இணையதளத்தில் நீங்கள் மீண்டும் பதிவு செய்தல் வேண்டும்.முன்னர் QR குறியீட்டிற்குப் பதிவு செய்யாதவர்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் (RMV) புதிதாகப் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள்:2026.03.15 காலை 6.00 மணி முதல் https://fuelpass.gov.lk/இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்தல் வேண்டும்.வாகனங்களுக்கான வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு (லீட்டரில்):பேருந்துகள் : 60  மோட்டார் சைக்கிள்கள்  : 5  வேன்கள் : 40 மோட்டார் வாகனங்கள் : 15 மோட்டார் லொறிகள்: 200 காணி வாகனங்கள் : 25முச்சக்கர வண்டிகள்: 15 விசேட தேவைக்கான வாகனங்கள் : 40 குவாட்ரிசைக்கிள்கள் (Quadricycle): 5நாட்டின் உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளைப் பேணுவதற்குத் தேவையான வாகனங்களுக்கு, உரிய நிறுவனங்களுடன் இணைந்து விசேட வேலைத்திட்டத்தின் கீழ் எரிபொருள் விநியோகிக்கப்படும்.தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கான எரிபொருள், இலங்கை போக்குவரத்து சபை ஊடாக விநியோகிக்கப்படும் என வலுசக்தி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறைமை மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு விரைவான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே QR குறியீட்டைப் பெற்றிருந்த மற்றும் தற்போதும் அதே வாகனம் மற்றும் அதே தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தும் நபர்கள், எவ்வித சிக்கலுமின்றி தமது புதிய QR குறியீட்டைப் புதுப்பித்துக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமது வாகனங்கள் அல்லது தொலைபேசி இலக்கங்களை மாற்றியுள்ளவர்கள் மற்றும் புதிய வாகனங்களைக் கொள்வனவு செய்தவர்கள் எதிர்கொள்ளும் தொழில்நுட்ப ரீதியான பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை மிக விரைவாகத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.அத்தியாவசிய சேவைகள் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கான எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட விசேட விடயங்கள் தொடர்பில் இன்று (15) பிற்பகல் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன. இன்றைய தினத்திற்குள்ளேயே அவற்றுக்கான உரிய தீர்வுகளை வழங்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement