• Apr 21 2026

கிண்ணியாவில் சுதந்திர தின விழாவில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்!

shanu / Feb 4th 2026, 11:24 am
image

இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருகோணமலை, கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் பல்வேறு விசேட நிகழ்வுகள் இன்று (04) மிகவும் விமர்சையாக நடைபெற்றன.


கிண்ணியா பிரதேச செயலாளர் எம். எச். எம். கனி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த பிரதான வைபவத்தில், கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஏ. எம். அஜீத், பிரதேச செயலகத்தின் உயர் அதிகாரிகள், ஏனைய திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


சுதந்திர தினத்தை அர்த்தமுள்ளதாக மாற்றும் வகையில் பின்வரும் சமூக நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன:


பொது இடங்கள் மற்றும் அரச அலுவலக வளாகங்கள் சிரமதானப் பணிகள் மூலம் துப்புரவு செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்டன.


 சுற்றாடலைப் பாதுகாக்கும் நோக்கில் கிண்ணியா பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் பயன்தரும் மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டன.


வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில், தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான கற்றல் உபகரணங்கள் இதன்போது அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.


இலங்கையின் சுதந்திரத்திற்காக இன, மத பேதமின்றி போராடிய தியாகிகளின் அர்ப்பணிப்புகள் மற்றும் அவர்களின் வரலாற்றுப் பின்னணிகள் குறித்து இதன்போது விசேட சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன. சுதந்திரத்தின் முக்கியத்துவத்தையும், நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு மக்களின் பங்களிப்பு அவசியம் என்பதையும் உரையாற்றிய பிரமுகர்கள் வலியுறுத்தினர்.


இந்நிகழ்வானது கிண்ணியா பிரதேச மக்களின் பெரும் வரவேற்புடன் தேசிய உணர்வுடன் நிறைவடைந்தது.

கிண்ணியாவில் சுதந்திர தின விழாவில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருகோணமலை, கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் பல்வேறு விசேட நிகழ்வுகள் இன்று (04) மிகவும் விமர்சையாக நடைபெற்றன.கிண்ணியா பிரதேச செயலாளர் எம். எச். எம். கனி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த பிரதான வைபவத்தில், கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஏ. எம். அஜீத், பிரதேச செயலகத்தின் உயர் அதிகாரிகள், ஏனைய திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.சுதந்திர தினத்தை அர்த்தமுள்ளதாக மாற்றும் வகையில் பின்வரும் சமூக நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன:பொது இடங்கள் மற்றும் அரச அலுவலக வளாகங்கள் சிரமதானப் பணிகள் மூலம் துப்புரவு செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்டன. சுற்றாடலைப் பாதுகாக்கும் நோக்கில் கிண்ணியா பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் பயன்தரும் மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டன.வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில், தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான கற்றல் உபகரணங்கள் இதன்போது அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.இலங்கையின் சுதந்திரத்திற்காக இன, மத பேதமின்றி போராடிய தியாகிகளின் அர்ப்பணிப்புகள் மற்றும் அவர்களின் வரலாற்றுப் பின்னணிகள் குறித்து இதன்போது விசேட சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன. சுதந்திரத்தின் முக்கியத்துவத்தையும், நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு மக்களின் பங்களிப்பு அவசியம் என்பதையும் உரையாற்றிய பிரமுகர்கள் வலியுறுத்தினர்.இந்நிகழ்வானது கிண்ணியா பிரதேச மக்களின் பெரும் வரவேற்புடன் தேசிய உணர்வுடன் நிறைவடைந்தது.

Advertisement

Advertisement

Advertisement