• Feb 20 2026

கஸ்ஸப தேரரின் கூற்று அப்பட்டமான பொய்! பிரதி அமைச்சர் சுனில் விளக்கம்

Chithra / Feb 14th 2026, 9:24 am
image


திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்துடன் கைது செய்யப்பட்ட கஸ்ஸப்ப தேரருடன் நான் ஒருபோதும் பேசியதில்லை. பொய்யான விடயங்களையே சமூகமயப்படுத்துகிறார். இவரது உள்நோக்கம் ஒருபோதும் வெற்றிபெறாது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.


கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார்.


திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட கஸ்ஸப்ப தேரரை நான் கடித தலைப்புடன் ஜனாதிபதி செயலகத்துக்கு வருகைத் தருமாறு குறிப்பிட்டதாக அவர் குறிப்பிடுகிறார். இது முற்றிலும் தவறானது.


கஸ்ஸப்ப தேரரை நான் சந்தித்ததும் இல்லை, அவருடன் தொலைபேசியில் பேசவுமில்லை. இவர் என் இவ்வாறு பொய்களை சொல்லி திரிகிறார் என்று தெரியவில்லை.


பொய்களை குறிப்பிட்டு தவறான விடயங்களையே சமூகமயப்படுத்த முயற்சிக்கிறார்.இவரது உள்நோக்கம் ஒருபோதும் வெற்றிப்பெறாது.


சட்டவிரோதமான செயற்பாடுகளுக்கு எதிராக சட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கும் போது இதுவரை காலமும் அந்த சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். 


எதிர்க்கட்சித் தலைவர் தவறென்று தெரிந்தும் சட்டவிரோதமான செயற்பாடுகளுக்கு துணைச் செல்கிறார். அவரது அரசியல் கொள்கை எவ்வாறானது என்பது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது என்றார்.

கஸ்ஸப தேரரின் கூற்று அப்பட்டமான பொய் பிரதி அமைச்சர் சுனில் விளக்கம் திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்துடன் கைது செய்யப்பட்ட கஸ்ஸப்ப தேரருடன் நான் ஒருபோதும் பேசியதில்லை. பொய்யான விடயங்களையே சமூகமயப்படுத்துகிறார். இவரது உள்நோக்கம் ஒருபோதும் வெற்றிபெறாது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார்.திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட கஸ்ஸப்ப தேரரை நான் கடித தலைப்புடன் ஜனாதிபதி செயலகத்துக்கு வருகைத் தருமாறு குறிப்பிட்டதாக அவர் குறிப்பிடுகிறார். இது முற்றிலும் தவறானது.கஸ்ஸப்ப தேரரை நான் சந்தித்ததும் இல்லை, அவருடன் தொலைபேசியில் பேசவுமில்லை. இவர் என் இவ்வாறு பொய்களை சொல்லி திரிகிறார் என்று தெரியவில்லை.பொய்களை குறிப்பிட்டு தவறான விடயங்களையே சமூகமயப்படுத்த முயற்சிக்கிறார்.இவரது உள்நோக்கம் ஒருபோதும் வெற்றிப்பெறாது.சட்டவிரோதமான செயற்பாடுகளுக்கு எதிராக சட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கும் போது இதுவரை காலமும் அந்த சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் தவறென்று தெரிந்தும் சட்டவிரோதமான செயற்பாடுகளுக்கு துணைச் செல்கிறார். அவரது அரசியல் கொள்கை எவ்வாறானது என்பது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது என்றார்.

Advertisement

Advertisement

Advertisement