• Oct 02 2026

காரைதீவு சமூகப் பராமரிப்பு நிலையம் திறந்து வைப்பு

dorin / Oct 1st 2026, 11:19 am
image

காரைதீவு பிரதேச மக்களின் சமூகப் பராமரிப்புச் சேவைகளை மேலும் விரிவுபடுத்தி, சிறப்பாக முன்னெடுக்கும் உயரிய நோக்கில் அமைக்கப்பட்ட புதிய சமூகப் பராமரிப்பு நிலையம் (Social Care Centre) புதன்கிழமை(30) திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநர்   கலாநிதி ஜயந்த லால் ரத்னசேகர  உட்பட  அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெகராஜன்  அதிதியாகக் கலந்துகொண்டு நிலையத்தினை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தனர்.

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இச் சிறப்பு விழாவிற்கு, அத்திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் ஜி. நவஜீவனா தலைமை தாங்கி நிகழ்வுகளைச்  வழிநடத்தினார்.

காரைதீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விசேட தேவைகளைக் கொண்ட மக்களுக்குத் தேவையான சமூகப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புச் சேவைகளை ஒரே கூரையின் கீழ் விரைவாக வழங்குவதற்கு இந்நிலையம் பெரும் உறுதுணையாக அமையும் எனக் கலந்துகொண்ட அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ் விழாவில் காரைதீவு உதவி பிரதேச செயலாளர்  பி. பிரணவரூபன்,  காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரன், திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலகப் பிரதிநிதிகள், சமூகப் பெரியார்கள் எனப் பல முக்கிய அதிதிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


காரைதீவு சமூகப் பராமரிப்பு நிலையம் திறந்து வைப்பு காரைதீவு பிரதேச மக்களின் சமூகப் பராமரிப்புச் சேவைகளை மேலும் விரிவுபடுத்தி, சிறப்பாக முன்னெடுக்கும் உயரிய நோக்கில் அமைக்கப்பட்ட புதிய சமூகப் பராமரிப்பு நிலையம் (Social Care Centre) புதன்கிழமை(30) திறந்து வைக்கப்பட்டது.கிழக்கு மாகாண ஆளுநர்   கலாநிதி ஜயந்த லால் ரத்னசேகர  உட்பட  அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெகராஜன்  அதிதியாகக் கலந்துகொண்டு நிலையத்தினை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தனர்.கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இச் சிறப்பு விழாவிற்கு, அத்திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் ஜி. நவஜீவனா தலைமை தாங்கி நிகழ்வுகளைச்  வழிநடத்தினார்.காரைதீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விசேட தேவைகளைக் கொண்ட மக்களுக்குத் தேவையான சமூகப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புச் சேவைகளை ஒரே கூரையின் கீழ் விரைவாக வழங்குவதற்கு இந்நிலையம் பெரும் உறுதுணையாக அமையும் எனக் கலந்துகொண்ட அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இவ் விழாவில் காரைதீவு உதவி பிரதேச செயலாளர்  பி. பிரணவரூபன்,  காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரன், திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலகப் பிரதிநிதிகள், சமூகப் பெரியார்கள் எனப் பல முக்கிய அதிதிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement