கந்தளாய் தள வைத்தியசாலையை மேம்படுத்தும் நோக்கில், சுமார் 112 மில்லியன் ரூபாய் செலவில் பல்வேறு புனரமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கந்தளாய் வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் டொக்டர் எம்.டி. உதார குணத்திலக்க தெரிவிக்கையில், 2026ஆம் ஆண்டுக்கான அவசரத் தேவைகளில் ஒன்றாக நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் காணப்பட்ட வெளிநோயாளர் பிரிவு (OPD) கட்டிடத்தின் புனரமைப்புப் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார்.
மேலும், வெளிப்பிரதேசங்களில் இருந்து சேவைக்காக வரும் நிபுணத்துவ மருத்துவர்களுக்காக இரண்டு பெரிய விடுதிகள் புனரமைக்கப்படுவதுடன், அவற்றில் ஆறு நிபுணத்துவ மருத்துவர்கள் தங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.
மாற்றுத்திறனாளி நோயாளர்களுக்காக OPD பிரிவில் சிறப்பு மலசலக்கூட வசதியும், வைத்தியசாலை ஊழியர்களுக்காக தனியான வாகன நிறுத்துமிடமும் அமைக்கப்படுகின்றன.
அதேவேளை, வைத்தியசாலையின் அறுவைச் சிகிச்சை அரங்கை பெரிய அளவில் புனரமைக்கும் திட்டம் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், பொதுமக்களுக்கு மேலும் தரமான மருத்துவ சேவைகளை வழங்கும் நோக்கில் வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு வசதிகள் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் மருத்துவ அத்தியட்சகர் தெரிவித்தார்.
கந்தளாய் வைத்தியசாலை ரூ.112 மில்லியன் செலவில் புனரமைப்பு கந்தளாய் தள வைத்தியசாலையை மேம்படுத்தும் நோக்கில், சுமார் 112 மில்லியன் ரூபாய் செலவில் பல்வேறு புனரமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.கந்தளாய் வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் டொக்டர் எம்.டி. உதார குணத்திலக்க தெரிவிக்கையில், 2026ஆம் ஆண்டுக்கான அவசரத் தேவைகளில் ஒன்றாக நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் காணப்பட்ட வெளிநோயாளர் பிரிவு (OPD) கட்டிடத்தின் புனரமைப்புப் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார்.மேலும், வெளிப்பிரதேசங்களில் இருந்து சேவைக்காக வரும் நிபுணத்துவ மருத்துவர்களுக்காக இரண்டு பெரிய விடுதிகள் புனரமைக்கப்படுவதுடன், அவற்றில் ஆறு நிபுணத்துவ மருத்துவர்கள் தங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. மாற்றுத்திறனாளி நோயாளர்களுக்காக OPD பிரிவில் சிறப்பு மலசலக்கூட வசதியும், வைத்தியசாலை ஊழியர்களுக்காக தனியான வாகன நிறுத்துமிடமும் அமைக்கப்படுகின்றன.அதேவேளை, வைத்தியசாலையின் அறுவைச் சிகிச்சை அரங்கை பெரிய அளவில் புனரமைக்கும் திட்டம் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், பொதுமக்களுக்கு மேலும் தரமான மருத்துவ சேவைகளை வழங்கும் நோக்கில் வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு வசதிகள் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் மருத்துவ அத்தியட்சகர் தெரிவித்தார்.