யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென் மேரிஸ் விளையாட்டு கழகம் வடமராட்சி கிழக்கு கழகங்களை உள்ளடக்கி நடாத்திய உள்ளூர் உதைபந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டி நேற்று(30)இடம்பெற்றுள்ளது.
சென்மேரிஸ் விளையாட்டு கழக தலைவர் அருள் விமலதாஸ் தலைமையில் பிற்பகல் 03.00 மணியளவில் சென்மேரிஸ் மைதானத்தில் இடம்பெற்றது
விருந்தினர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது.
குறித்த இறுதி போட்டியில் KNOBELE KNIGHTS அணியை எதிர்த்து YOUNG FIGHTERS அணி மோதியிருந்தது.
போட்டியின் இறுதியில் 3-0 என்னும் கோல் கணக்கில் YOUNG FIGHTERS அணி வெற்றியை தனதாக்கிக் கொண்டது.
இரண்டு கோலினை செலுத்திய றொனால்ட் ஆட்ட நாயகனாக தெரிவானார்.
1ம் இடம் மற்றும் 2ம் இடம்பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கேடயத்துடன் பணப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலை மாணவர்களும் சென்மேரிஸ் விளையாட்டு கழகத்தால் கௌரவிக்கப்பட்டனர்.
முள்ளியான் வைத்தியசாலை வைத்தியர் யோ.திவ்யா, முள்ளியான் கிராம அலுவலர் கி.சுபகுமார் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் அலஸ்ரன்,பொலிஸ்குழு தலைவர்,கிராம அபிவிருத்திச்சங்கம்,முள்ளியான் உப அஞ்சல் அலுவலக அதிகாரி,ஆகியோர் கலந்து கொண்டதுடன் பொதுமக்களும் கலந்து கொண்டனர்
யாழ் வடமராட்சி உள்ளூர் உதைபந்தாட்ட இறுதிப் போட்டி யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென் மேரிஸ் விளையாட்டு கழகம் வடமராட்சி கிழக்கு கழகங்களை உள்ளடக்கி நடாத்திய உள்ளூர் உதைபந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டி நேற்று(30)இடம்பெற்றுள்ளது.சென்மேரிஸ் விளையாட்டு கழக தலைவர் அருள் விமலதாஸ் தலைமையில் பிற்பகல் 03.00 மணியளவில் சென்மேரிஸ் மைதானத்தில் இடம்பெற்றதுவிருந்தினர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது.குறித்த இறுதி போட்டியில் KNOBELE KNIGHTS அணியை எதிர்த்து YOUNG FIGHTERS அணி மோதியிருந்தது.போட்டியின் இறுதியில் 3-0 என்னும் கோல் கணக்கில் YOUNG FIGHTERS அணி வெற்றியை தனதாக்கிக் கொண்டது.இரண்டு கோலினை செலுத்திய றொனால்ட் ஆட்ட நாயகனாக தெரிவானார்.1ம் இடம் மற்றும் 2ம் இடம்பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கேடயத்துடன் பணப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலை மாணவர்களும் சென்மேரிஸ் விளையாட்டு கழகத்தால் கௌரவிக்கப்பட்டனர்.நிகழ்வின் பிரத அதிதியாக கட்டைக்காடு பங்குத்தந்தை வசந்தன்,சிறப்பு அதிதியாக கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையினுடைய அதிபர் த.யோகலிங்கம்,முள்ளியான் வைத்தியசாலை வைத்தியர் யோ.திவ்யா, முள்ளியான் கிராம அலுவலர் கி.சுபகுமார் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் அலஸ்ரன்,பொலிஸ்குழு தலைவர்,கிராம அபிவிருத்திச்சங்கம்,முள்ளியான் உப அஞ்சல் அலுவலக அதிகாரி,ஆகியோர் கலந்து கொண்டதுடன் பொதுமக்களும் கலந்து கொண்டனர்