யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் பகல் நேரங்களில் சூரிய சக்தி மூலம் தேவைக்கு அதிகமாக உற்பத்தியாகும் மின்சாரத்தை சேமித்து, இரவு நேரங்களில் பயன்படுத்தும் நோக்கில் நிறுவப்படவுள்ள பாரியளவிலான மின் சேமிப்பு கலங்கள் (Battery Storage Systems) இன்று (05) குறித்த பகுதிகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த மின் கலங்கள் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் நிறுவப்படவுள்ள நிலையில், அவற்றின் வருகை மற்றும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் நேரில் சென்று பார்வையிட்டார்.
இத்திட்டத்தின் மூலம் சூரிய சக்தி மின் உற்பத்தியின் பயன்பாட்டை அதிகரிப்பதுடன், பகலில் உற்பத்தியாகும் மேலதிக மின்சாரத்தை வீணாக்காமல் சேமித்து, இரவு நேர மின் தேவையை பூர்த்தி செய்யும் வசதி ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், வடக்கு மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க சக்தி பயன்பாட்டை மேம்படுத்துவதற்கான முக்கிய முன்னேற்றமாக இந்தத் திட்டம் கருதப்படுகின்றது.
யாழ். - கிளிநொச்சிக்கு வந்தடைந்த பாரிய மின் கலங்கள்; எம்.பி. இளங்குமரன் ஆய்வு யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் பகல் நேரங்களில் சூரிய சக்தி மூலம் தேவைக்கு அதிகமாக உற்பத்தியாகும் மின்சாரத்தை சேமித்து, இரவு நேரங்களில் பயன்படுத்தும் நோக்கில் நிறுவப்படவுள்ள பாரியளவிலான மின் சேமிப்பு கலங்கள் (Battery Storage Systems) இன்று (05) குறித்த பகுதிகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.இந்த மின் கலங்கள் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் நிறுவப்படவுள்ள நிலையில், அவற்றின் வருகை மற்றும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் நேரில் சென்று பார்வையிட்டார்.இத்திட்டத்தின் மூலம் சூரிய சக்தி மின் உற்பத்தியின் பயன்பாட்டை அதிகரிப்பதுடன், பகலில் உற்பத்தியாகும் மேலதிக மின்சாரத்தை வீணாக்காமல் சேமித்து, இரவு நேர மின் தேவையை பூர்த்தி செய்யும் வசதி ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும், வடக்கு மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க சக்தி பயன்பாட்டை மேம்படுத்துவதற்கான முக்கிய முன்னேற்றமாக இந்தத் திட்டம் கருதப்படுகின்றது.