10 ஆண்டுகளுக்கு முன்பு ஆழ்கடலில் தொலைந்து போன ஒரு விலையுயர்ந்த கைக்கடிகாரம், ஒரு சிறு சேதமும் இன்றி மீட்கப்பட்ட சம்பவம் இணையதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் (Gold Coast) கடற்கரையில், கடந்த 2013-ம் ஆண்டு மாட் கிராஸ் என்பவர் அலைச்சறுக்கு (Surfing) விளையாடிக்கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக ஒரு ராட்சத அலையில் சிக்கிய அவரது கைக்கடிகாரம், மணிக்கட்டில் இருந்து கழன்று ஆழ்கடலுக்குள் மறைந்தது. பலமுறை தேடியும் கிடைக்காததால், அது இனி கிடைக்காது என அவர் நம்பிக்கையை கைவிட்டிருந்தார்.
சமீபத்தில் அதே கடற்கரையில் அலைச்சறுக்கு விளையாடிக்கொண்டிருந்த ரிக் ஆண்டர்சன் என்பவரின் கண்ணில், மணலுக்கு அடியில் பிரகாசமான ஒரு பொருள் தென்பட்டது.
மணலை அகற்றி அவர் எடுத்துப் பார்த்தபோது, அது ஒரு ரோலக்ஸ் சப்மரைனர் (Rolex Submariner) கைக்கடிகாரம் என்பது தெரியவந்தது.
10 ஆண்டுகள் உப்பு நீர், மணல் மற்றும் ஆழ்கடல் அழுத்தத்தில் சிக்கியிருந்த பிறகும், அந்தக் கடிகாரம் எவ்வித கீறலும் (Scratch) இன்றி, துல்லியமாக ஓடிக்கொண்டிருந்ததைக் கண்டு அவர் மிரண்டு போனார்.
ரிக் ஆண்டர்சன் இந்தக் கடிகாரத்தின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, அதன் உரிமையாளரைத் தேடினார். சில நாட்களிலேயே, 10 ஆண்டுகளுக்கு முன்பு அதனைத் தொலைத்த மாட் கிராஸ் அடையாளம் காணப்பட்டார்.
தொலைந்து போன எனது உடலின் ஒரு பகுதியே மீண்டும் என்னிடம் வந்தது போல உணர்கிறேன். 10 ஆண்டுகள் கடலுக்கு அடியில் இருந்தும் இது இன்னும் ஓடுகிறது என்பது நம்ப முடியாத அதிசயம் என உரிமையாளர் தெரிவித்தார்.
கடலுக்கு அடியிலிருந்து 10 ஆண்டுகளுக்கு பின்னர் கிடைத்தபொருள்-ஆச்சரியத்தில் உறைந்த உரிமையாளர் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆழ்கடலில் தொலைந்து போன ஒரு விலையுயர்ந்த கைக்கடிகாரம், ஒரு சிறு சேதமும் இன்றி மீட்கப்பட்ட சம்பவம் இணையதளங்களில் தீயாய் பரவி வருகிறது.ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் (Gold Coast) கடற்கரையில், கடந்த 2013-ம் ஆண்டு மாட் கிராஸ் என்பவர் அலைச்சறுக்கு (Surfing) விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு ராட்சத அலையில் சிக்கிய அவரது கைக்கடிகாரம், மணிக்கட்டில் இருந்து கழன்று ஆழ்கடலுக்குள் மறைந்தது. பலமுறை தேடியும் கிடைக்காததால், அது இனி கிடைக்காது என அவர் நம்பிக்கையை கைவிட்டிருந்தார்.சமீபத்தில் அதே கடற்கரையில் அலைச்சறுக்கு விளையாடிக்கொண்டிருந்த ரிக் ஆண்டர்சன் என்பவரின் கண்ணில், மணலுக்கு அடியில் பிரகாசமான ஒரு பொருள் தென்பட்டது.மணலை அகற்றி அவர் எடுத்துப் பார்த்தபோது, அது ஒரு ரோலக்ஸ் சப்மரைனர் (Rolex Submariner) கைக்கடிகாரம் என்பது தெரியவந்தது.10 ஆண்டுகள் உப்பு நீர், மணல் மற்றும் ஆழ்கடல் அழுத்தத்தில் சிக்கியிருந்த பிறகும், அந்தக் கடிகாரம் எவ்வித கீறலும் (Scratch) இன்றி, துல்லியமாக ஓடிக்கொண்டிருந்ததைக் கண்டு அவர் மிரண்டு போனார்.ரிக் ஆண்டர்சன் இந்தக் கடிகாரத்தின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, அதன் உரிமையாளரைத் தேடினார். சில நாட்களிலேயே, 10 ஆண்டுகளுக்கு முன்பு அதனைத் தொலைத்த மாட் கிராஸ் அடையாளம் காணப்பட்டார்.தொலைந்து போன எனது உடலின் ஒரு பகுதியே மீண்டும் என்னிடம் வந்தது போல உணர்கிறேன். 10 ஆண்டுகள் கடலுக்கு அடியில் இருந்தும் இது இன்னும் ஓடுகிறது என்பது நம்ப முடியாத அதிசயம் என உரிமையாளர் தெரிவித்தார்.