• Oct 17 2026

நாமல் ராஜபக்ஷவுக்கு பிணையா? பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Chithra / Oct 16th 2026, 11:33 am
image



கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பிணை தொடர்பில் பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


70 மில்லியன் ரூபாய் இலஞ்சம் வழங்கியமை மற்றும் பெற்றுக்கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், நாமல் ராஜபக்ஷவும் கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தனவும் கைது செய்யப்பட்டிருந்தனர்.


இந்த வழக்கு இன்று கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


இதன்போது ஜானகி சிறிவர்தன சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுவை நீதவான் நிராகரித்தார்.


ஆனால், நாமல் ராஜபக்ஷவின் பிணை தொடர்பான உத்தரவு இன்னும் தயாராகவில்லை என நீதவான் அறிவித்துள்ளார்.


இதனால், நாமல் ராஜபக்ஷ மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகிய இருவரையும் எதிர்வரும் ஒக்டோபர் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை வழங்கப்படுமா என்பது தொடர்பான தீர்மானம் அடுத்த வழக்கு விசாரணையின்போதே அறிவிக்கப்படவுள்ளது 

நாமல் ராஜபக்ஷவுக்கு பிணையா பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பிணை தொடர்பில் பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.70 மில்லியன் ரூபாய் இலஞ்சம் வழங்கியமை மற்றும் பெற்றுக்கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், நாமல் ராஜபக்ஷவும் கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தனவும் கைது செய்யப்பட்டிருந்தனர்.இந்த வழக்கு இன்று கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது ஜானகி சிறிவர்தன சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுவை நீதவான் நிராகரித்தார்.ஆனால், நாமல் ராஜபக்ஷவின் பிணை தொடர்பான உத்தரவு இன்னும் தயாராகவில்லை என நீதவான் அறிவித்துள்ளார்.இதனால், நாமல் ராஜபக்ஷ மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகிய இருவரையும் எதிர்வரும் ஒக்டோபர் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை வழங்கப்படுமா என்பது தொடர்பான தீர்மானம் அடுத்த வழக்கு விசாரணையின்போதே அறிவிக்கப்படவுள்ளது 

Advertisement

Advertisement

Advertisement