அல்லைப்பிட்டியில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான சிறுவனின் அருள் பயஸின் படுகொலைக்கு தீர்வைத்தர அனுர அரசும் பின்னடிப்பதாக குற்றம் சாட்டியுள்ள சிறுவனின் உறவுகள், தாம் நீதி கோரி ஜனாதிபதியைச் சந்திக்க சென்றிருந்த போதும் அவரை சந்திப்பதற்கு அதிகாரிகள் சந்தர்ப்பத்தை வழங்காது தடுத்துவிட்டனர். இது நீதியை எதிர்பார்த்திருக்கும் தமக்கு ஏமாற்றமளிப்பதாகவும் தெரிவித்தனர்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று ஊடக சந்திப்பை முன்னெடுத்து இவ்வாறு கூறிய அவர்கள் மேலும் தெரிவிக்கையில் -
கடந்த மாசி மாதம் 10 ஆம் திகதி வேலணை அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சிறுவன் அருள் பயஸ் உயிரிழந்திருந்தார்.
ஆனால் இதுவரை எமது மகனுக்கான நியாயம் கிடைக்கதிருப்பதுடன் குடும்பத்தினர் மீதும் பலியான சிறுவன் மீதும் பொய்யான தகவல்களைக் கூறி சமூக ஊடகங்களில் அவமானப்படுத்தி வருகின்றனர்.
எனது குடும்ப நிலையும் வேதனையும் எமக்குத்தான் தெரியும். நீதிமன்று எமக்கான தீர்வை பெற்றுத்தரும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கின்றது.
ஆனால் பொலிசார் சிறுவனின் மரணம் தொடர்பில் உண்மைகளை மறைக்கின்ற முயற்சியில் கடுமையாக ஈடுபட்டு வருகின்றனர்.
எம்மை எமது செயற்பாடுகளை நாளும் கண்காணித்து எமக்கு அச்சுறுத்தல் கொடுக்கின்றனர்.
இன்னிலையில் நாம் ஜனாதிபதிக்கு நிலமையை எடுத்துச் செல்ல கொழும்பு சென்றிருந்தோம். ஆனால் எம்னை அங்கு மனிதராக கூட மதிக்காது அவமதித்தனர்.
இதே நேரம் எமது இல்லத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இளப்க்குமரன் வந்து நிலமைகளை கேட்டறிந்து நியாயம் பெற்றுத்தருவதாக கூறியிருந்தார்.
ஆனால் வந்து சென்றது மட்டும்தான் அதன் பின்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்டால் கூட அசர் தொடருக்கு வருவதில்லை.
இதே நேரம் ஸ்ரீதரன் எம்.பி வீட்டுக்கு வரவில்லை. ஆனால் எமது மகனின் கொலைக்கு நியாயம் வேண்டும் என நாடாளுமன்றில் பேசியிருந்தார். அவர் செய்ததைக் கூட ஆளும் தரபில் இருக்கும் இந்த இளங்குமரன் எம்.பி செய்யவில்லை. இவர்களை எல்லாம் நாம் மக்கள் பிரதிநிதிகள் என்று எவ்வாறு நம்ப முடியும்.
எனவே எமது மகனின் கொலைக்கு நியாயம் கிடைக்க வழிவகை செய்ய அனைவரும் முன்வாருங்கள் என்றும் அழைப்பு விடுத்திருந்தார்.
மக்கள் பிரச்சினையை கண்டுகொள்ளாத எம்.பி. இளங்குமரன் ஒரு மக்கள் பிரதிநிதியா - அருள் பயஸின் உறவுகள் சாடல் அல்லைப்பிட்டியில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான சிறுவனின் அருள் பயஸின் படுகொலைக்கு தீர்வைத்தர அனுர அரசும் பின்னடிப்பதாக குற்றம் சாட்டியுள்ள சிறுவனின் உறவுகள், தாம் நீதி கோரி ஜனாதிபதியைச் சந்திக்க சென்றிருந்த போதும் அவரை சந்திப்பதற்கு அதிகாரிகள் சந்தர்ப்பத்தை வழங்காது தடுத்துவிட்டனர். இது நீதியை எதிர்பார்த்திருக்கும் தமக்கு ஏமாற்றமளிப்பதாகவும் தெரிவித்தனர். யாழ் ஊடக அமையத்தில் இன்று ஊடக சந்திப்பை முன்னெடுத்து இவ்வாறு கூறிய அவர்கள் மேலும் தெரிவிக்கையில் -கடந்த மாசி மாதம் 10 ஆம் திகதி வேலணை அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சிறுவன் அருள் பயஸ் உயிரிழந்திருந்தார்.ஆனால் இதுவரை எமது மகனுக்கான நியாயம் கிடைக்கதிருப்பதுடன் குடும்பத்தினர் மீதும் பலியான சிறுவன் மீதும் பொய்யான தகவல்களைக் கூறி சமூக ஊடகங்களில் அவமானப்படுத்தி வருகின்றனர்.எனது குடும்ப நிலையும் வேதனையும் எமக்குத்தான் தெரியும். நீதிமன்று எமக்கான தீர்வை பெற்றுத்தரும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கின்றது.ஆனால் பொலிசார் சிறுவனின் மரணம் தொடர்பில் உண்மைகளை மறைக்கின்ற முயற்சியில் கடுமையாக ஈடுபட்டு வருகின்றனர். எம்மை எமது செயற்பாடுகளை நாளும் கண்காணித்து எமக்கு அச்சுறுத்தல் கொடுக்கின்றனர்.இன்னிலையில் நாம் ஜனாதிபதிக்கு நிலமையை எடுத்துச் செல்ல கொழும்பு சென்றிருந்தோம். ஆனால் எம்னை அங்கு மனிதராக கூட மதிக்காது அவமதித்தனர்.இதே நேரம் எமது இல்லத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இளப்க்குமரன் வந்து நிலமைகளை கேட்டறிந்து நியாயம் பெற்றுத்தருவதாக கூறியிருந்தார்.ஆனால் வந்து சென்றது மட்டும்தான் அதன் பின்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்டால் கூட அசர் தொடருக்கு வருவதில்லை.இதே நேரம் ஸ்ரீதரன் எம்.பி வீட்டுக்கு வரவில்லை. ஆனால் எமது மகனின் கொலைக்கு நியாயம் வேண்டும் என நாடாளுமன்றில் பேசியிருந்தார். அவர் செய்ததைக் கூட ஆளும் தரபில் இருக்கும் இந்த இளங்குமரன் எம்.பி செய்யவில்லை. இவர்களை எல்லாம் நாம் மக்கள் பிரதிநிதிகள் என்று எவ்வாறு நம்ப முடியும்.எனவே எமது மகனின் கொலைக்கு நியாயம் கிடைக்க வழிவகை செய்ய அனைவரும் முன்வாருங்கள் என்றும் அழைப்பு விடுத்திருந்தார்.