• Aug 28 2026

டிரம்ப் அனுப்பிய தூதரா ஆசிம் முனீர்?உண்மையை உடைத்த பாகிஸ்தான்

Ziya / Aug 27th 2026, 3:52 pm
image

அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றமான சூழலில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்டு மார்ஷல் ஆசிம் முனீர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தூதராக ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்குச் சென்றதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.


பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் தாஹிர் அன்ட்ராபி, இந்த தகவல்கள் “தவறானவை மற்றும் உண்மைக்கு முற்றிலும் புறம்பானவை” எனக் கூறியுள்ளார்.


ஆகஸ்ட் 24ஆம் தேதி ஆசிம் முனீர் மேற்கொண்ட தெஹ்ரான் பயணம், டிரம்பின் சார்பாக மேற்கொள்ளப்பட்ட தூதரகப் பயணம் அல்ல என்றும், வாஷிங்டன்–தெஹ்ரான் இடையிலான கருத்து வேறுபாடுகளை குறைப்பதற்கான பாகிஸ்தானின் தொடர்ச்சியான மத்தியஸ்த முயற்சிகளின் ஒரு பகுதியாகவே அது அமைந்ததாகவும் பாகிஸ்தான் விளக்கம் அளித்துள்ளது.


இந்தப் பயணத்தின் போது ஈரான் அதிபர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளை ஆசிம் முனீர் சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும், பாகிஸ்தானின் மத்தியஸ்த முயற்சிகளை ஈரானிய அதிகாரிகள் பாராட்டியதாகவும் பாகிஸ்தான் ராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


குறிப்பாக, இந்தப் பயணத்தின் முடிவுகள் “விரைவில் தெரியவரும்” என்றும், இது முக்கியமான தூதரக விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் ஈரான் அதிபர் அலுவலக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.


இதனால், ஆசிம் முனீரின் தெஹ்ரான் பயணம் வெறும் வழக்கமான இருதரப்பு சந்திப்பா அல்லது அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றத்தைத் தணிக்கும் பாகிஸ்தானின் பெரிய அளவிலான மத்தியஸ்த முயற்சியின் முக்கிய கட்டமா என்ற கேள்வி எழுந்துள்ளது

டிரம்ப் அனுப்பிய தூதரா ஆசிம் முனீர்உண்மையை உடைத்த பாகிஸ்தான் அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றமான சூழலில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்டு மார்ஷல் ஆசிம் முனீர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தூதராக ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்குச் சென்றதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் தாஹிர் அன்ட்ராபி, இந்த தகவல்கள் “தவறானவை மற்றும் உண்மைக்கு முற்றிலும் புறம்பானவை” எனக் கூறியுள்ளார்.ஆகஸ்ட் 24ஆம் தேதி ஆசிம் முனீர் மேற்கொண்ட தெஹ்ரான் பயணம், டிரம்பின் சார்பாக மேற்கொள்ளப்பட்ட தூதரகப் பயணம் அல்ல என்றும், வாஷிங்டன்–தெஹ்ரான் இடையிலான கருத்து வேறுபாடுகளை குறைப்பதற்கான பாகிஸ்தானின் தொடர்ச்சியான மத்தியஸ்த முயற்சிகளின் ஒரு பகுதியாகவே அது அமைந்ததாகவும் பாகிஸ்தான் விளக்கம் அளித்துள்ளது.இந்தப் பயணத்தின் போது ஈரான் அதிபர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளை ஆசிம் முனீர் சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தானின் மத்தியஸ்த முயற்சிகளை ஈரானிய அதிகாரிகள் பாராட்டியதாகவும் பாகிஸ்தான் ராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.குறிப்பாக, இந்தப் பயணத்தின் முடிவுகள் “விரைவில் தெரியவரும்” என்றும், இது முக்கியமான தூதரக விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் ஈரான் அதிபர் அலுவலக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.இதனால், ஆசிம் முனீரின் தெஹ்ரான் பயணம் வெறும் வழக்கமான இருதரப்பு சந்திப்பா அல்லது அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றத்தைத் தணிக்கும் பாகிஸ்தானின் பெரிய அளவிலான மத்தியஸ்த முயற்சியின் முக்கிய கட்டமா என்ற கேள்வி எழுந்துள்ளது

Advertisement

Advertisement

Advertisement