• Apr 15 2026

ஈரான் போரை விரும்பவில்லை,ஆனால் ஈரானுக்கு அடி பணியாது - ஈரான் ஜனாதிபதி தெரிவிப்பு!

Ziya / Apr 15th 2026, 4:03 pm
image

அமெரிக்கா விதித்துள்ள கடல்வழி முற்றுகை மற்றும் போர்ப்பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் (Masoud Pezeshkian) தனது நாட்டின் உறுதியான நிலைப்பாட்டை உலகிற்கு அறிவித்துள்ளார். 


ஈரான் அமைதியையே விரும்புகிறது, ஆனால் அழுத்தங்களுக்குப் பணிந்து விடாது" என அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.


ஈரானிய செய்தி நிறுவனமான IRNA-விற்கு அளித்துள்ள பேட்டியில், அமெரிக்காவின் 'விருப்பத்தைத் திணிக்கும்' போக்கினை அதிபர் பெஷெஷ்கியன் கடுமையாகச் சாடியுள்ளார்:


"ஈரான் எப்போதும் போரை நாடுவதில்லை, மாறாக சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்ட நேர்மையான பேச்சுவார்த்தைகளையே நாங்கள் விரும்புகிறோம்," என அவர் கூறியுள்ளார்.


 ஈரானைச் சரணடையச் செய்ய அமெரிக்கா எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வரலாற்றில் நிகழ்ந்தது போலவே இப்போதும் தோல்வியில்தான் முடியும் என அவர் எச்சரித்துள்ளார்.


பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் மீதான தாக்குதல்களைக் குறிப்பிட்டு அதிபர் பெஷெஷ்கியன் எழுப்பியுள்ள கேள்விகள் சர்வதேச அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது:


"சர்வதேச சட்டத்தின் கீழ், பொதுமக்களையும், குழந்தைகளையும் குறிவைப்பதற்கும், மருத்துவமனைகள் போன்ற முக்கிய மையங்களை அழிப்பதற்கும் என்ன நியாயம் இருக்கிறது?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


கல்வி நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள் ஈரானின் வளர்ச்சியைத் தடுக்கும் ஒரு சதிச் செயல் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.


ஹோர்முஸ் ஜலசந்தி தொடர்பாக எழும் விமர்சனங்களுக்கு ஈரானியத் தரப்பிலிருந்து புதிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது:


"ஹோர்முஸ் ஜலசந்தி ஈரானின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி. போர்ச் சூழல் காரணமாகவே தற்போது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது எங்களின் இறையாண்மை சார்ந்த உரிமை," என ஈரானியத் தூதரகம் தெரிவித்துள்ளது.


ஈரான் போரை விரும்பவில்லை,ஆனால் ஈரானுக்கு அடி பணியாது - ஈரான் ஜனாதிபதி தெரிவிப்பு அமெரிக்கா விதித்துள்ள கடல்வழி முற்றுகை மற்றும் போர்ப்பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் (Masoud Pezeshkian) தனது நாட்டின் உறுதியான நிலைப்பாட்டை உலகிற்கு அறிவித்துள்ளார். ஈரான் அமைதியையே விரும்புகிறது, ஆனால் அழுத்தங்களுக்குப் பணிந்து விடாது" என அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.ஈரானிய செய்தி நிறுவனமான IRNA-விற்கு அளித்துள்ள பேட்டியில், அமெரிக்காவின் 'விருப்பத்தைத் திணிக்கும்' போக்கினை அதிபர் பெஷெஷ்கியன் கடுமையாகச் சாடியுள்ளார்:"ஈரான் எப்போதும் போரை நாடுவதில்லை, மாறாக சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்ட நேர்மையான பேச்சுவார்த்தைகளையே நாங்கள் விரும்புகிறோம்," என அவர் கூறியுள்ளார். ஈரானைச் சரணடையச் செய்ய அமெரிக்கா எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வரலாற்றில் நிகழ்ந்தது போலவே இப்போதும் தோல்வியில்தான் முடியும் என அவர் எச்சரித்துள்ளார்.பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் மீதான தாக்குதல்களைக் குறிப்பிட்டு அதிபர் பெஷெஷ்கியன் எழுப்பியுள்ள கேள்விகள் சர்வதேச அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது:"சர்வதேச சட்டத்தின் கீழ், பொதுமக்களையும், குழந்தைகளையும் குறிவைப்பதற்கும், மருத்துவமனைகள் போன்ற முக்கிய மையங்களை அழிப்பதற்கும் என்ன நியாயம் இருக்கிறது" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.கல்வி நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள் ஈரானின் வளர்ச்சியைத் தடுக்கும் ஒரு சதிச் செயல் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.ஹோர்முஸ் ஜலசந்தி தொடர்பாக எழும் விமர்சனங்களுக்கு ஈரானியத் தரப்பிலிருந்து புதிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது:"ஹோர்முஸ் ஜலசந்தி ஈரானின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி. போர்ச் சூழல் காரணமாகவே தற்போது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது எங்களின் இறையாண்மை சார்ந்த உரிமை," என ஈரானியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement