• Apr 18 2026

குவைத்தில் எரிசக்தி, கடல்நீர்ச் சுத்திகரிப்பு ஆலை மீது ஈரான் தாக்குதல்; இந்தியத் தொழிலாளி உயிரிழப்பு!

Ziya / Mar 30th 2026, 3:34 pm
image

குவைத்திலுள்ள எரிசக்தி, கடல்நீர்ச் சுத்திகரிப்பு ஆலை மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்திய ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.


குவைத்தின் மின், நீர், பசுமை எரிசக்தி அமைச்சு அந்தத் தகவலை வெளியிட்டது.


தாக்குதலில் மின் ஆலை பலத்த சேதம் அடைந்ததாக அமைச்சு குறிப்பிட்டது. 


ஆலையைச் சீர்படுத்தும் நடவடிக்கையில் தொழில்நுட்ப, அவசரகால ஊழியர்கள் ஈடுபட்டிருப்பதாகவும் அமைச்சு தெரிவித்தது. 


பொதுமக்கள் அமைதி காக்கும்படியும் வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்கும் படியும் அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. 


உயிரிழந்த இந்தியத் தொழிலாளியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள இந்தியத் தூதரகம், தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகக் கூறியுள்ளது.


ஐக்கிய அரபு ராச்சியத்தில் ஏற்கெனவே இந்திய ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். ஈரானிய ஏவுகணைகள் வழிமறிக்கப்பட்ட போது அதன் சிதைவுகள் வீதியில் விழுந்தன. அதில் அவர் உயிரிழந்தார்.




குவைத்தில் எரிசக்தி, கடல்நீர்ச் சுத்திகரிப்பு ஆலை மீது ஈரான் தாக்குதல்; இந்தியத் தொழிலாளி உயிரிழப்பு குவைத்திலுள்ள எரிசக்தி, கடல்நீர்ச் சுத்திகரிப்பு ஆலை மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்திய ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.குவைத்தின் மின், நீர், பசுமை எரிசக்தி அமைச்சு அந்தத் தகவலை வெளியிட்டது.தாக்குதலில் மின் ஆலை பலத்த சேதம் அடைந்ததாக அமைச்சு குறிப்பிட்டது. ஆலையைச் சீர்படுத்தும் நடவடிக்கையில் தொழில்நுட்ப, அவசரகால ஊழியர்கள் ஈடுபட்டிருப்பதாகவும் அமைச்சு தெரிவித்தது. பொதுமக்கள் அமைதி காக்கும்படியும் வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்கும் படியும் அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. உயிரிழந்த இந்தியத் தொழிலாளியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள இந்தியத் தூதரகம், தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகக் கூறியுள்ளது.ஐக்கிய அரபு ராச்சியத்தில் ஏற்கெனவே இந்திய ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். ஈரானிய ஏவுகணைகள் வழிமறிக்கப்பட்ட போது அதன் சிதைவுகள் வீதியில் விழுந்தன. அதில் அவர் உயிரிழந்தார்.

Advertisement

Advertisement

Advertisement