• Jul 03 2026

மட்டக்குளி முதல் நெடுங்கேணி வரை அதிரடி சோதனை – இரு கடத்தல்காரர்கள் கைது

Chithra / Jul 2nd 2026, 9:51 am
image


மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெர்குசன் வீதியில்  ​ஐந்து கிலோ கிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


நேற்று மதியம் (01) கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் (CCDB) அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது, 40 வயதான குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.


இதன்போது 5 கிலோ கிராம் 140 கிராம் ஹெரோயின், போதைப்பொருள் கடத்தல் மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 50,000 ரூபாய் பணம் மற்றும் போதைப்பொருள் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு கைபேசிகள் ஆகியவற்றையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.


இவர் மட்டக்குளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


 

இதேவேளை முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த 31 வயது நபர் ஒருவர், காரில் 78 கிலோ கேரள கஞ்சாவை கடத்தி சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளதாக நெடுங்கேணி பொலிசார் தெரிவித்தனர்.


வவுனியா - நெடுங்கேணி பொலிஸ் நிலைய அதிகாரிகள் நேற்றுமுன்தினம் இரவு பெரியகுளம் சந்தி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடியில், சொகுசு கார் ஒன்றினை சோதனை செய்த போது அதில் 78 கிலோகிராம் கேரள கஞ்சா  கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து  அதில் பயணித்த நபரும் கைது செய்யப்பட்டார்.


சந்தேகநபர் 31 வயதுடைய புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இந்த சம்பவம் தொடர்பாக நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


 

மட்டக்குளி முதல் நெடுங்கேணி வரை அதிரடி சோதனை – இரு கடத்தல்காரர்கள் கைது மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெர்குசன் வீதியில்  ​ஐந்து கிலோ கிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று மதியம் (01) கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் (CCDB) அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது, 40 வயதான குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.இதன்போது 5 கிலோ கிராம் 140 கிராம் ஹெரோயின், போதைப்பொருள் கடத்தல் மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 50,000 ரூபாய் பணம் மற்றும் போதைப்பொருள் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு கைபேசிகள் ஆகியவற்றையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.இவர் மட்டக்குளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த 31 வயது நபர் ஒருவர், காரில் 78 கிலோ கேரள கஞ்சாவை கடத்தி சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளதாக நெடுங்கேணி பொலிசார் தெரிவித்தனர்.வவுனியா - நெடுங்கேணி பொலிஸ் நிலைய அதிகாரிகள் நேற்றுமுன்தினம் இரவு பெரியகுளம் சந்தி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடியில், சொகுசு கார் ஒன்றினை சோதனை செய்த போது அதில் 78 கிலோகிராம் கேரள கஞ்சா  கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து  அதில் பயணித்த நபரும் கைது செய்யப்பட்டார்.சந்தேகநபர் 31 வயதுடைய புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இந்த சம்பவம் தொடர்பாக நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement