• Oct 16 2026

வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய இந்திய வர்த்தகப் பிரதிநிதிகள் குழுக்கள் இலங்கைக்கு விஜயம்

dorin / Oct 15th 2026, 2:43 pm
image

இந்தியாவின் இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு (Confederation of Indian Industry – CII) மற்றும் கொச்சி வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம் (Cochin Chamber of Commerce and Industry – CCCI) ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலா 10 உறுப்பினர்களைக் கொண்ட இரண்டு வர்த்தகப் பிரதிநிதிகள் குழுக்கள், 2026 ஒக்டோபர் 12 மற்றும் 13ஆம் திகதிகளில் இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு உச்சி மாநாடு 2026 இல் பங்கேற்பதற்காக கொழும்புக்கு விஜயம் செய்தன.

இந்த விஜயங்கள் இலங்கையில் வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வதற்கும், நிறுவனங்களுக்கு இடையிலான நேரடி வர்த்தகத் தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கும் வாய்ப்பளித்தன.

சுகாதாரம் மற்றும் மருந்துப் பொருட்கள், சூரியசக்தி, தகவல் தொழில்நுட்பம், உற்பத்தித்துறை மற்றும் காலணித் தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகளைக் கொண்ட இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பின் (CII) குழு, இலங்கையின் முக்கிய பங்குதாரர்களுடன் தொடர்ச்சியான சந்திப்புகளை நடத்தியது.

இச்சந்திப்புகளில் இலங்கையின் எரிசக்தி அமைச்சர் கௌரவ அனுர கருணாதிலக்க, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப் பிரதி அமைச்சர் கௌரவ சதுரங்க அபேசிங்க, இலங்கை முதலீட்டுச் சபை (BOI) மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதன்போது முதலீட்டு வாய்ப்புகள், வர்த்தக முன்னேற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் இரு தரப்பினருக்கும் பொதுவான ஆர்வமுள்ள பல்வேறு துறைகளில் வர்த்தக ஒத்துழைப்புகளை ஏற்படுத்துவது தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.

சுகாதாரம், தளவாடச் சேவைகள், கட்டுமானப் பொருட்கள், வணிக ஆலோசனை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கொச்சி வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்தின் பிரதிநிதிகள் குழுவும் இலங்கையின் முக்கிய பங்குதாரர்களுடன் பல்வேறு சந்திப்புகளை நடத்தியது.

இக்குழுவினர் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப் பிரதி அமைச்சர் கௌரவ சதுரங்க அபேசிங்க மற்றும் இலங்கை முதலீட்டுச் சபையின் சிரேஷ்ட அதிகாரிகளைச் சந்தித்தனர்.

மேலும், இலங்கை நிறுவனங்களுடன் நேரடி வர்த்தகச் சந்திப்புகளை (B2B) நடத்தி, சாத்தியமான வணிகக் கூட்டாண்மைகள் மற்றும் ஒத்துழைப்பு வாய்ப்புகள் தொடர்பாக ஆராய்ந்தனர்.

இவ்விஜயத்தின் ஒரு பகுதியாக, இலங்கையின் தொழில்துறை செயற்பாடுகள் குறித்து நேரடி அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் நெஸ்லே (Nestlé) மற்றும் எலிபன்ட் ஹவுஸ் (Elephant House) நிறுவனங்களின் உற்பத்தி நிலையங்களுக்கும் இக்குழுவினர் விஜயம் செய்தனர்.

இரு வர்த்தகப் பிரதிநிதிகள் குழுக்களும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மாண்புமிகு சந்தோஷ் ஜா அவர்களையும் சந்தித்தன.

இதன்போது இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் இலங்கையில் இந்திய வர்த்தக நிறுவனங்களுக்குக் காணப்படும் வளர்ந்து வரும் வாய்ப்புகள் தொடர்பான தனது கருத்துக்களை உயர்ஸ்தானிகர் பகிர்ந்துகொண்டார்.

இலங்கை வர்த்தக நிறுவனங்களுடனான தொடர்புகளை மேலும் ஆழப்படுத்தவும், வணிகக் கூட்டாண்மைகளை ஏற்படுத்தவும், வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஆராயவும் அவர் இந்தியாவிலிருந்து வருகை தந்த நிறுவனங்களை ஊக்குவித்தார்.

கொச்சி வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்தின் பிரதிநிதிகள் குழுவின் விஜயமானது, பிராந்திய மற்றும் உபதேசிய மட்டங்களில் இலங்கையுடனான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்காக இந்திய உயர்ஸ்தானிகராலயம் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

இந்தியாவின் பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த வர்த்தக சம்மேளனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கும் அவற்றின் இலங்கைப் பங்காளிகளுக்கும் இடையிலான தொடர்புகளையும் பரஸ்பரச் சந்திப்புகளையும் அதிகரிப்பதன் மூலம் இம்முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதேவேளை, தென் குஜராத் வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம் (SGCCI) மற்றும் இந்திய வர்த்தக சம்மேளனத்தின் தமிழ்நாடு மாநிலப் பேரவை (ICC) ஆகியவற்றின் வர்த்தகப் பிரதிநிதிகள் குழுக்களும் இந்த ஆண்டின் முற்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு உச்சி மாநாடு 2026 இன் பக்க நிகழ்வாக, கேரளா மற்றும் இலங்கைக்கு இடையிலான வர்த்தக மற்றும் வணிக ஒத்துழைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில் கொச்சி வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனமும் இலங்கை வர்த்தக சம்மேளனமும் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் (MoU) கைச்சாத்திட்டன.

கொச்சி வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினரான திரு. சி. எஸ். கார்த்தா மற்றும் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் திரு. கிரிஷான் பலேந்திர ஆகியோர் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

வணிகத் தொடர்புகளை மேலும் மேம்படுத்துதல், நெருக்கமான வர்த்தக உறவுகளை உருவாக்குதல் மற்றும் இரு தரப்பினருக்கும் பரஸ்பர நன்மை பயக்கும் வணிக வாய்ப்புகளை ஊக்குவித்தல் ஆகியவற்றை இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக, நிறுவனங்களுக்கு இடையிலான நேரடி வர்த்தகத் தொடர்புகள் மற்றும் நிறுவனம்சார் கூட்டாண்மைகளை மேம்படுத்தும் தொடர்ச்சியான முயற்சிகளை இந்த இரு பிரதிநிதிகள் குழுக்களின் விஜயங்களும் எடுத்துக்காட்டுகின்றன.


வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய இந்திய வர்த்தகப் பிரதிநிதிகள் குழுக்கள் இலங்கைக்கு விஜயம் இந்தியாவின் இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு (Confederation of Indian Industry – CII) மற்றும் கொச்சி வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம் (Cochin Chamber of Commerce and Industry – CCCI) ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலா 10 உறுப்பினர்களைக் கொண்ட இரண்டு வர்த்தகப் பிரதிநிதிகள் குழுக்கள், 2026 ஒக்டோபர் 12 மற்றும் 13ஆம் திகதிகளில் இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு உச்சி மாநாடு 2026 இல் பங்கேற்பதற்காக கொழும்புக்கு விஜயம் செய்தன.இந்த விஜயங்கள் இலங்கையில் வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வதற்கும், நிறுவனங்களுக்கு இடையிலான நேரடி வர்த்தகத் தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கும் வாய்ப்பளித்தன.சுகாதாரம் மற்றும் மருந்துப் பொருட்கள், சூரியசக்தி, தகவல் தொழில்நுட்பம், உற்பத்தித்துறை மற்றும் காலணித் தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகளைக் கொண்ட இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பின் (CII) குழு, இலங்கையின் முக்கிய பங்குதாரர்களுடன் தொடர்ச்சியான சந்திப்புகளை நடத்தியது.இச்சந்திப்புகளில் இலங்கையின் எரிசக்தி அமைச்சர் கௌரவ அனுர கருணாதிலக்க, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப் பிரதி அமைச்சர் கௌரவ சதுரங்க அபேசிங்க, இலங்கை முதலீட்டுச் சபை (BOI) மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதன்போது முதலீட்டு வாய்ப்புகள், வர்த்தக முன்னேற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் இரு தரப்பினருக்கும் பொதுவான ஆர்வமுள்ள பல்வேறு துறைகளில் வர்த்தக ஒத்துழைப்புகளை ஏற்படுத்துவது தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.சுகாதாரம், தளவாடச் சேவைகள், கட்டுமானப் பொருட்கள், வணிக ஆலோசனை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கொச்சி வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்தின் பிரதிநிதிகள் குழுவும் இலங்கையின் முக்கிய பங்குதாரர்களுடன் பல்வேறு சந்திப்புகளை நடத்தியது.இக்குழுவினர் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப் பிரதி அமைச்சர் கௌரவ சதுரங்க அபேசிங்க மற்றும் இலங்கை முதலீட்டுச் சபையின் சிரேஷ்ட அதிகாரிகளைச் சந்தித்தனர்.மேலும், இலங்கை நிறுவனங்களுடன் நேரடி வர்த்தகச் சந்திப்புகளை (B2B) நடத்தி, சாத்தியமான வணிகக் கூட்டாண்மைகள் மற்றும் ஒத்துழைப்பு வாய்ப்புகள் தொடர்பாக ஆராய்ந்தனர்.இவ்விஜயத்தின் ஒரு பகுதியாக, இலங்கையின் தொழில்துறை செயற்பாடுகள் குறித்து நேரடி அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் நெஸ்லே (Nestlé) மற்றும் எலிபன்ட் ஹவுஸ் (Elephant House) நிறுவனங்களின் உற்பத்தி நிலையங்களுக்கும் இக்குழுவினர் விஜயம் செய்தனர்.இரு வர்த்தகப் பிரதிநிதிகள் குழுக்களும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மாண்புமிகு சந்தோஷ் ஜா அவர்களையும் சந்தித்தன.இதன்போது இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் இலங்கையில் இந்திய வர்த்தக நிறுவனங்களுக்குக் காணப்படும் வளர்ந்து வரும் வாய்ப்புகள் தொடர்பான தனது கருத்துக்களை உயர்ஸ்தானிகர் பகிர்ந்துகொண்டார்.இலங்கை வர்த்தக நிறுவனங்களுடனான தொடர்புகளை மேலும் ஆழப்படுத்தவும், வணிகக் கூட்டாண்மைகளை ஏற்படுத்தவும், வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஆராயவும் அவர் இந்தியாவிலிருந்து வருகை தந்த நிறுவனங்களை ஊக்குவித்தார்.கொச்சி வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்தின் பிரதிநிதிகள் குழுவின் விஜயமானது, பிராந்திய மற்றும் உபதேசிய மட்டங்களில் இலங்கையுடனான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்காக இந்திய உயர்ஸ்தானிகராலயம் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.இந்தியாவின் பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த வர்த்தக சம்மேளனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கும் அவற்றின் இலங்கைப் பங்காளிகளுக்கும் இடையிலான தொடர்புகளையும் பரஸ்பரச் சந்திப்புகளையும் அதிகரிப்பதன் மூலம் இம்முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.இதேவேளை, தென் குஜராத் வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம் (SGCCI) மற்றும் இந்திய வர்த்தக சம்மேளனத்தின் தமிழ்நாடு மாநிலப் பேரவை (ICC) ஆகியவற்றின் வர்த்தகப் பிரதிநிதிகள் குழுக்களும் இந்த ஆண்டின் முற்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு உச்சி மாநாடு 2026 இன் பக்க நிகழ்வாக, கேரளா மற்றும் இலங்கைக்கு இடையிலான வர்த்தக மற்றும் வணிக ஒத்துழைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில் கொச்சி வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனமும் இலங்கை வர்த்தக சம்மேளனமும் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் (MoU) கைச்சாத்திட்டன.கொச்சி வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினரான திரு. சி. எஸ். கார்த்தா மற்றும் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் திரு. கிரிஷான் பலேந்திர ஆகியோர் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.வணிகத் தொடர்புகளை மேலும் மேம்படுத்துதல், நெருக்கமான வர்த்தக உறவுகளை உருவாக்குதல் மற்றும் இரு தரப்பினருக்கும் பரஸ்பர நன்மை பயக்கும் வணிக வாய்ப்புகளை ஊக்குவித்தல் ஆகியவற்றை இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக, நிறுவனங்களுக்கு இடையிலான நேரடி வர்த்தகத் தொடர்புகள் மற்றும் நிறுவனம்சார் கூட்டாண்மைகளை மேம்படுத்தும் தொடர்ச்சியான முயற்சிகளை இந்த இரு பிரதிநிதிகள் குழுக்களின் விஜயங்களும் எடுத்துக்காட்டுகின்றன.

Advertisement

Advertisement

Advertisement