• Sep 24 2026

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு மாணவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

dorin / Sep 24th 2026, 11:01 am
image

நுவரெலியா மாவட்டம், ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் ஆரம்பப் பிரிவுப் பகுதியில் நரிகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மாணவர்கள் பெரும் அச்ச நிலைமையுடன் பாடசாலைக்குச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

பாடசாலை மைதானம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் காலை வேளைகளில் இந்த நரிக் கூட்டங்கள் நடமாடுவதை அவதானிக்க முடிகிறது. இதனால் பிள்ளைகளின் பாதுகாப்பு கருதி பெற்றோர்களும் ஆசிரியர்களும் மிகுந்த கவலை கொண்டுள்ளனர்.

நரிகளின் நடமாட்டம் தொடர்வதால் மாணவர்கள் வழமை போன்று மைதானத்தில் விளையாட முடியாத  நிலை ஏற்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, அப்பகுதியில் தெருநாய்களின் தொல்லையும் அளவுக்கு அதிகமாக அதிகரித்துள்ளது.

வெறிநாய்க்கடி ஆபத்து மற்றும் காட்டு விலங்குகளின் தாக்கங்கள் எற்படலாம் என்ற அச்சம் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், உடனடியாக சம்பந்தப்பட்ட வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும், உள்ளூராட்சி மன்ற அதிகாரிகளும் இப்பிரச்சினையில் தகுந்த கவனம் செலுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு மைதானம் மற்றும் பாடசாலை வளாகத்தைச் சுற்றியுள்ள பற்றைகள் காரணமாக அபாயகரமான சூழ்நிலைகளைக் கட்டுப்படுத்தி, நரிகளைப் பிடித்து பாதுகாப்பான வனப் பகுதிக்குக் கொண்டு செல்வதற்குரிய துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு பெற்றோர்களும் பாடசாலை சமூகத்தினரும் கேட்டுக்கொள்கின்றனர்.

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு மாணவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நுவரெலியா மாவட்டம், ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் ஆரம்பப் பிரிவுப் பகுதியில் நரிகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மாணவர்கள் பெரும் அச்ச நிலைமையுடன் பாடசாலைக்குச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.பாடசாலை மைதானம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் காலை வேளைகளில் இந்த நரிக் கூட்டங்கள் நடமாடுவதை அவதானிக்க முடிகிறது. இதனால் பிள்ளைகளின் பாதுகாப்பு கருதி பெற்றோர்களும் ஆசிரியர்களும் மிகுந்த கவலை கொண்டுள்ளனர்.நரிகளின் நடமாட்டம் தொடர்வதால் மாணவர்கள் வழமை போன்று மைதானத்தில் விளையாட முடியாத  நிலை ஏற்பட்டுள்ளது.இதுமட்டுமின்றி, அப்பகுதியில் தெருநாய்களின் தொல்லையும் அளவுக்கு அதிகமாக அதிகரித்துள்ளது.வெறிநாய்க்கடி ஆபத்து மற்றும் காட்டு விலங்குகளின் தாக்கங்கள் எற்படலாம் என்ற அச்சம் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், உடனடியாக சம்பந்தப்பட்ட வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும், உள்ளூராட்சி மன்ற அதிகாரிகளும் இப்பிரச்சினையில் தகுந்த கவனம் செலுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.விளையாட்டு மைதானம் மற்றும் பாடசாலை வளாகத்தைச் சுற்றியுள்ள பற்றைகள் காரணமாக அபாயகரமான சூழ்நிலைகளைக் கட்டுப்படுத்தி, நரிகளைப் பிடித்து பாதுகாப்பான வனப் பகுதிக்குக் கொண்டு செல்வதற்குரிய துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு பெற்றோர்களும் பாடசாலை சமூகத்தினரும் கேட்டுக்கொள்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement