• Apr 14 2026

பண்டிகை கால உணவு வகைகளின் விலைகள் அதிகரிப்பு

Chithra / Apr 8th 2026, 12:31 pm
image

பண்டிகை கால உணவு வகைகளின் விலைகள் இன்று (08) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உற்சவ மண்டபங்கள் மற்றும் உணவு வழங்குநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 


இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்தச் சங்கத்தின் தலைவர் அகில ஜயரத்ன கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.


அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,


மே மாதம் முதல் மேற்கொள்ளப்படும் புதிய முன்பதிவுகளுக்கு 15% முதல் 20% வரை கட்டணங்கள் அதிகரிக்கப்படலாமெனவும் நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி மற்றும் பெறுமதி சேர் வரி அதிகரிப்பு காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


இருப்பினும், தமது பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து முறையான தீர்வு அல்லது நிவாரணம் கிடைக்குமாயின், இந்த விலையேற்றத்தை மீண்டும் குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அகில இலங்கை உற்சவ மண்டபங்கள் மற்றும் உணவு வழங்குநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


பண்டிகை கால உணவு வகைகளின் விலைகள் அதிகரிப்பு பண்டிகை கால உணவு வகைகளின் விலைகள் இன்று (08) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உற்சவ மண்டபங்கள் மற்றும் உணவு வழங்குநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்தச் சங்கத்தின் தலைவர் அகில ஜயரத்ன கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,மே மாதம் முதல் மேற்கொள்ளப்படும் புதிய முன்பதிவுகளுக்கு 15% முதல் 20% வரை கட்டணங்கள் அதிகரிக்கப்படலாமெனவும் நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி மற்றும் பெறுமதி சேர் வரி அதிகரிப்பு காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இருப்பினும், தமது பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து முறையான தீர்வு அல்லது நிவாரணம் கிடைக்குமாயின், இந்த விலையேற்றத்தை மீண்டும் குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அகில இலங்கை உற்சவ மண்டபங்கள் மற்றும் உணவு வழங்குநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement