வவுனியா வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் சுகாதார திணைக்களத்தின் அனுசரனையுடன் முன்னெடுக்கப்படும் நடமாடும் தொடர் இலவச மருத்துவ முகாமின் முதற்கட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வர்த்தக சங்க கட்டடத்தில் காலை 9.00 மணி தொடக்கம் மதியம் 1.00 மணிவரை இடம்பெற்ற இவ் இலவச மருத்துவ முகாமில் குருதி பரிசோதனை, இருதய துடிப்பு, கண் பரிசோதனை, பல் பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, வைத்தியரின் ஆலோசனைகள் என பல சேவைகள் இடம்பெற்றிருந்தன.
மேலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கான சத்துணவு பொருட்கள் அடங்கிய பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டதுடன், இதில் 50க்கு மேற்பட்டவர்கள் பங்கேற்று பயனடைந்திருந்தனர்.
தொடர் இலவச மருத்துவ முகாமின் இரண்டாவது கட்டம் வவுனியா குருமன்காட்டு சந்தியில் எதிர்வரும் வியாழக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது.
வவுனியாவில் நடமாடும் தொடர் இலவச மருத்துவ முகாம் ஆரம்பம் வவுனியா வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் சுகாதார திணைக்களத்தின் அனுசரனையுடன் முன்னெடுக்கப்படும் நடமாடும் தொடர் இலவச மருத்துவ முகாமின் முதற்கட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.வர்த்தக சங்க கட்டடத்தில் காலை 9.00 மணி தொடக்கம் மதியம் 1.00 மணிவரை இடம்பெற்ற இவ் இலவச மருத்துவ முகாமில் குருதி பரிசோதனை, இருதய துடிப்பு, கண் பரிசோதனை, பல் பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, வைத்தியரின் ஆலோசனைகள் என பல சேவைகள் இடம்பெற்றிருந்தன.மேலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கான சத்துணவு பொருட்கள் அடங்கிய பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டதுடன், இதில் 50க்கு மேற்பட்டவர்கள் பங்கேற்று பயனடைந்திருந்தனர்.தொடர் இலவச மருத்துவ முகாமின் இரண்டாவது கட்டம் வவுனியா குருமன்காட்டு சந்தியில் எதிர்வரும் வியாழக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது.