இன்னும் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களில் மின்சாரத் தடையை அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஏப்ரல் 12 ஆம் திகதியாகும் போது டீசல் தீர்ந்துவிடும். தற்போது வந்துள்ள கப்பல்களில் பெரும்பாலும் பெட்ரோலே உள்ளது.
பெட்ரோல் நுகர்வுக்காகப் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் டீசல் மின்சார உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
மின்சார சபையின் 'சிஸ்டம் கண்ட்ரோல் சென்டர்' அறிக்கைகளை நான் சபையில் சமர்ப்பிக்கிறேன். நுரைச்சோலையில் தரமற்ற நிலக்கரி காரணமாக 150 மெகாவாட் மின்சாரம் குறைவடைந்துள்ளது.
மின்சார உற்பத்தியில் முதலில் செலவு குறைந்த நீர் மின்சாரம், சூரிய சக்தி, காற்று மற்றும் உயிரியல் எரிபொருள் ஆகியவற்றையே பயன்படுத்த வேண்டும்.
அதன் பின்னரே நிலக்கரிக்கும், அதுவும் போதாவிடின் ஏனைய எரிபொருட்களுக்கும் செல்ல வேண்டும். கடைசியாகவே டீசலுக்குச் செல்ல வேண்டும்.
நுரைச்சோலையில் இருந்து கிடைக்க வேண்டிய 810 மெகாவாட் மின்சாரம் முழுமையாகக் கிடைத்திருந்தால், இன்று மின்சார உற்பத்திக்கு ஒரு லீட்டர் எண்ணெய் கூடத் தேவைப்பட்டிருக்காது.
ஆனால் தற்போதுள்ள நிலையில், குறைவடைந்துள்ள 150 மெகாவாட் மின்சாரத்தை ஈடுகட்ட வாரத்திற்கு 35 இலட்சம் லீட்டர் டீசலும், மாதத்திற்கு 140 இலட்சம் லீட்டர் டீசலும் செலவாகிறது.
மின்சார சபையின் அறிக்கைகளின்படி, இன்னும் ஓரிரு வாரங்களில் நாடு மீண்டும் மின்சாரத் தடையை நோக்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இன்னும் இரு வாரங்களில் நாடு இருளில் மூழ்கும் எச்சரித்த டி.வி.சானக இன்னும் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களில் மின்சாரத் தடையை அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க எச்சரித்துள்ளார்.நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.ஏப்ரல் 12 ஆம் திகதியாகும் போது டீசல் தீர்ந்துவிடும். தற்போது வந்துள்ள கப்பல்களில் பெரும்பாலும் பெட்ரோலே உள்ளது. பெட்ரோல் நுகர்வுக்காகப் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் டீசல் மின்சார உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படுகிறது.மின்சார சபையின் 'சிஸ்டம் கண்ட்ரோல் சென்டர்' அறிக்கைகளை நான் சபையில் சமர்ப்பிக்கிறேன். நுரைச்சோலையில் தரமற்ற நிலக்கரி காரணமாக 150 மெகாவாட் மின்சாரம் குறைவடைந்துள்ளது.மின்சார உற்பத்தியில் முதலில் செலவு குறைந்த நீர் மின்சாரம், சூரிய சக்தி, காற்று மற்றும் உயிரியல் எரிபொருள் ஆகியவற்றையே பயன்படுத்த வேண்டும். அதன் பின்னரே நிலக்கரிக்கும், அதுவும் போதாவிடின் ஏனைய எரிபொருட்களுக்கும் செல்ல வேண்டும். கடைசியாகவே டீசலுக்குச் செல்ல வேண்டும்.நுரைச்சோலையில் இருந்து கிடைக்க வேண்டிய 810 மெகாவாட் மின்சாரம் முழுமையாகக் கிடைத்திருந்தால், இன்று மின்சார உற்பத்திக்கு ஒரு லீட்டர் எண்ணெய் கூடத் தேவைப்பட்டிருக்காது.ஆனால் தற்போதுள்ள நிலையில், குறைவடைந்துள்ள 150 மெகாவாட் மின்சாரத்தை ஈடுகட்ட வாரத்திற்கு 35 இலட்சம் லீட்டர் டீசலும், மாதத்திற்கு 140 இலட்சம் லீட்டர் டீசலும் செலவாகிறது.மின்சார சபையின் அறிக்கைகளின்படி, இன்னும் ஓரிரு வாரங்களில் நாடு மீண்டும் மின்சாரத் தடையை நோக்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.