• May 15 2025

கனடாவில் இனப்படுகொலை நினைவுச் சின்னம்; உயர்ஸ்தானிகரை அழைத்து எதிர்ப்பு தெரிவித்த இலங்கை அரசு

Chithra / May 15th 2025, 7:55 am
image


இலங்கை அரசாங்கம் ஆதரமற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை கடுமையாக நிராகரிப்பதாகவும், கனடாவில் இனப்படுகொலை நினைவுச்சின்னம் நிர்மாணிக்கப்படுகின்றமை தொடர்பில் கண்டனம் தெரிவிப்பதாகவும் வௌிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 

அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக, வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் நேற்று கனேடிய உயர் ஸ்தானிகரைச் சந்தித்து, ஆதரமற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் மற்றும் அத்தகைய நினைவுச்சின்னத்தை நிர்மாணிப்பதற்கான அனுமதிக்கு இலங்கை அரசாங்கத்தின் கடுமையான எதிர்ப்பை மீண்டும் வலியுறுத்தினார்.

இத்தகைய நடவடிக்கைகள், நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கான அரசாங்கத்தின் முயற்சிகளை சிக்கலாக்கி, குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டினார்.


கனடாவில் இனப்படுகொலை நினைவுச் சின்னம்; உயர்ஸ்தானிகரை அழைத்து எதிர்ப்பு தெரிவித்த இலங்கை அரசு இலங்கை அரசாங்கம் ஆதரமற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை கடுமையாக நிராகரிப்பதாகவும், கனடாவில் இனப்படுகொலை நினைவுச்சின்னம் நிர்மாணிக்கப்படுகின்றமை தொடர்பில் கண்டனம் தெரிவிப்பதாகவும் வௌிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது.இது தொடர்பாக, வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் நேற்று கனேடிய உயர் ஸ்தானிகரைச் சந்தித்து, ஆதரமற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் மற்றும் அத்தகைய நினைவுச்சின்னத்தை நிர்மாணிப்பதற்கான அனுமதிக்கு இலங்கை அரசாங்கத்தின் கடுமையான எதிர்ப்பை மீண்டும் வலியுறுத்தினார்.இத்தகைய நடவடிக்கைகள், நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கான அரசாங்கத்தின் முயற்சிகளை சிக்கலாக்கி, குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டினார்.

Advertisement

Advertisement

Advertisement