தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அங்கு நிலவும் குறைபாடுகள் தொடர்பில் வைத்தியர் குழுவிடம் கேட்டறிந்து கொண்டார்.
இதில் தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எச்.தாலிப் அலி,உப தவிசாளர் வி.விஜய குமார் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள் வைத்தியசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த விஜயம் நேற்று இடம் பெற்றது இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்
இங்கு தேவையாகவுள்ள பிண அறை தொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பேசப்பட்டதற்கிணங்க அதனை கருத்திற் கொண்டு தரம் Cயில் உள்ள இவ் வைத்தியசாலையின் பல வசதிகளின் தேவை தொடர்பில் பலராலும் முன்வைக்கப்படுகின்றது
அந்த அடிப்படையில் இதனை எதிர்காலத்தில் நிவர்த்திக்க அரசின் முயற்சிகளோடும் தனியார் துறை நிறுவனங்களின் ஒத்துழைப்போடும் தீர்க்க முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளோம்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் இங்கு விஜயம் செய்வதாக உறுதியளித்துள்ளார் மிக விரைவில் குறைபாடுகள் உள்ள விடயங்களை தீர்க்க நடவடிக்கை எடுப்போம் என மேலும் தெரிவித்தார்.
தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பில் -நேரடி விஜயம் செய்த இம்ரான் எம்.பி தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அங்கு நிலவும் குறைபாடுகள் தொடர்பில் வைத்தியர் குழுவிடம் கேட்டறிந்து கொண்டார். இதில் தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எச்.தாலிப் அலி,உப தவிசாளர் வி.விஜய குமார் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள் வைத்தியசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.குறித்த விஜயம் நேற்று இடம் பெற்றது இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இங்கு தேவையாகவுள்ள பிண அறை தொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பேசப்பட்டதற்கிணங்க அதனை கருத்திற் கொண்டு தரம் Cயில் உள்ள இவ் வைத்தியசாலையின் பல வசதிகளின் தேவை தொடர்பில் பலராலும் முன்வைக்கப்படுகின்றது அந்த அடிப்படையில் இதனை எதிர்காலத்தில் நிவர்த்திக்க அரசின் முயற்சிகளோடும் தனியார் துறை நிறுவனங்களின் ஒத்துழைப்போடும் தீர்க்க முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளோம். கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் இங்கு விஜயம் செய்வதாக உறுதியளித்துள்ளார் மிக விரைவில் குறைபாடுகள் உள்ள விடயங்களை தீர்க்க நடவடிக்கை எடுப்போம் என மேலும் தெரிவித்தார்.