எதிர்வரும் 6 ஆம் மற்றும் 7 ஆம் திகதிகளில் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் ஒரு நாள் சேவை உள்ளிட்ட ஏனைய அனைத்து சேவைகளும் இடம்பெறாது என ஆட்களை பதிவுச் செய்யும் திணைக்களம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.
விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேரம் செயற்படும் சேவை எதிர்வரும் 05, 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் நிறுத்தப்படும் என பதில் குடிவரவு குடியகல்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த திகதிகளில் ஏனைய சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பதில் குடிவரவு குடியகல்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைக்கப்பட்ட அனுமதிப் பத்திரம் கொண்டவற்றைத் தவிர, அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
05, 06, 07 ஆம் திகதிகளில் முடங்கும் முக்கிய சேவைகள்; இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு எதிர்வரும் 6 ஆம் மற்றும் 7 ஆம் திகதிகளில் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் ஒரு நாள் சேவை உள்ளிட்ட ஏனைய அனைத்து சேவைகளும் இடம்பெறாது என ஆட்களை பதிவுச் செய்யும் திணைக்களம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.இதேவேளை ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேரம் செயற்படும் சேவை எதிர்வரும் 05, 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் நிறுத்தப்படும் என பதில் குடிவரவு குடியகல்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், குறித்த திகதிகளில் ஏனைய சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பதில் குடிவரவு குடியகல்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைக்கப்பட்ட அனுமதிப் பத்திரம் கொண்டவற்றைத் தவிர, அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.