• Oct 28 2026

கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு! நாளை முதல் புதிய நடைமுறை அமுல்

Chithra / Oct 28th 2026, 2:02 pm
image


இலங்கையில் கடவுச்சீட்டு பெறுவதற்காக விண்ணப்பிக்கவுள்ள பொதுமக்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.


அதன்படி, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதேச அலுவலகங்களில் கடவுச்சீட்டு பெறுவதற்கு நாளை (29.10.2026) முதல் இணையவழி நேர முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


ஒருநாள் சேவை மற்றும் சாதாரண சேவை ஆகிய இரண்டு முறைகளின் கீழும் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு இந்தப் புதிய நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது.


இதன்படி, பிரதேச அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று கடவுச்சீட்டு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க விரும்புவோர், அங்கு செல்வதற்கு முன்னதாக இணையதளம் ஊடாகத் தங்களுக்கான திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்துகொள்வது அவசியமாகும்.


முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கிக்கொள்ளாமல் பிரதேச அலுவலகங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


எனவே, நாளை முதல் கடவுச்சீட்டுக்காக விண்ணப்பிக்கத் திட்டமிட்டுள்ளவர்கள் இந்தப் புதிய நடைமுறையைக் கவனத்தில் கொள்ளுமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு நாளை முதல் புதிய நடைமுறை அமுல் இலங்கையில் கடவுச்சீட்டு பெறுவதற்காக விண்ணப்பிக்கவுள்ள பொதுமக்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதேச அலுவலகங்களில் கடவுச்சீட்டு பெறுவதற்கு நாளை (29.10.2026) முதல் இணையவழி நேர முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.ஒருநாள் சேவை மற்றும் சாதாரண சேவை ஆகிய இரண்டு முறைகளின் கீழும் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு இந்தப் புதிய நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது.இதன்படி, பிரதேச அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று கடவுச்சீட்டு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க விரும்புவோர், அங்கு செல்வதற்கு முன்னதாக இணையதளம் ஊடாகத் தங்களுக்கான திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்துகொள்வது அவசியமாகும்.முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கிக்கொள்ளாமல் பிரதேச அலுவலகங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.எனவே, நாளை முதல் கடவுச்சீட்டுக்காக விண்ணப்பிக்கத் திட்டமிட்டுள்ளவர்கள் இந்தப் புதிய நடைமுறையைக் கவனத்தில் கொள்ளுமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement