• Apr 19 2026

பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு: ஆசிரியர்கள், மாணவர்களின் வரவு குறையும் அபாயம்!

Chithra / Mar 17th 2026, 10:33 am
image


தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக பாடசாலைகளின் அன்றாட செயல்பாடுகள் ஏற்கனவே பாதிக்கத் தொடங்கியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இதற்கான அவசரத் தீர்வுகள் எட்டப்படாவிட்டால், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பாடசாலை வரவு பாரிய அளவில் வீழ்ச்சியடையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


பெரும்பாலான ஆசிரியர்கள் பாடசாலைக்குச் செல்ல மோட்டார் சைக்கிளையே நம்பியுள்ளனர். தற்போது வாரத்திற்கு வழங்கப்படும் 5 லீற்றர் எரிபொருள் அவர்களின் ஐந்து நாள் பயணத்திற்கு எவ்விதத்திலும் போதுமானதல்ல.


பல ஆசிரியர்கள் ஒரு நாளைக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வரை பயணம் செய்ய வேண்டியுள்ளது. இவர்களால் தற்போதைய எரிபொருள் ஒதுக்கீட்டின் கீழ் பாடசாலைக்குச் செல்வது இயலாத காரியமாகும்.


எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக நீண்ட நேரம் வரிசைகளில் காத்திருக்க வேண்டியுள்ளதால், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுமுறை விண்ணப்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


தற்போது நடைபெற்று வரும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.


பல ஆசிரியர்கள் மதிப்பீட்டு நிலையங்களுக்குச் செல்ல ஒரு நாளைக்கு சுமார் 100 கிலோமீற்றர் வரை பயணம் செய்ய வேண்டியுள்ளது.


பொதுப் போக்குவரத்துக்கு வழங்கப்படும் எரிபொருள் அளவு போதுமானதாக இல்லாததால், ஆசிரியர்கள் மட்டுமன்றி மாணவர்களின் வரவும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.


பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு: ஆசிரியர்கள், மாணவர்களின் வரவு குறையும் அபாயம் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக பாடசாலைகளின் அன்றாட செயல்பாடுகள் ஏற்கனவே பாதிக்கத் தொடங்கியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதற்கான அவசரத் தீர்வுகள் எட்டப்படாவிட்டால், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பாடசாலை வரவு பாரிய அளவில் வீழ்ச்சியடையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பெரும்பாலான ஆசிரியர்கள் பாடசாலைக்குச் செல்ல மோட்டார் சைக்கிளையே நம்பியுள்ளனர். தற்போது வாரத்திற்கு வழங்கப்படும் 5 லீற்றர் எரிபொருள் அவர்களின் ஐந்து நாள் பயணத்திற்கு எவ்விதத்திலும் போதுமானதல்ல.பல ஆசிரியர்கள் ஒரு நாளைக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வரை பயணம் செய்ய வேண்டியுள்ளது. இவர்களால் தற்போதைய எரிபொருள் ஒதுக்கீட்டின் கீழ் பாடசாலைக்குச் செல்வது இயலாத காரியமாகும்.எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக நீண்ட நேரம் வரிசைகளில் காத்திருக்க வேண்டியுள்ளதால், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுமுறை விண்ணப்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.தற்போது நடைபெற்று வரும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.பல ஆசிரியர்கள் மதிப்பீட்டு நிலையங்களுக்குச் செல்ல ஒரு நாளைக்கு சுமார் 100 கிலோமீற்றர் வரை பயணம் செய்ய வேண்டியுள்ளது.பொதுப் போக்குவரத்துக்கு வழங்கப்படும் எரிபொருள் அளவு போதுமானதாக இல்லாததால், ஆசிரியர்கள் மட்டுமன்றி மாணவர்களின் வரவும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement