பிரதி புதன்கிழமை அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அன்றைய தினம் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதி கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச பாடசாலைகளும் இந்த நடைமுறையைப் பின்பற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமையும் முன்பள்ளிகளை நடத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமையும் மேலதிக வகுப்புக்கள் மற்றும் விரிவுரைகளை நடத்த வேண்டாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
எரிபொருள் கையிருப்பில் உள்ள போதிலும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நெருக்கடிகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதன்கிழமைகளில் தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை பிரதி புதன்கிழமை அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அன்றைய தினம் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதி கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.சர்வதேச பாடசாலைகளும் இந்த நடைமுறையைப் பின்பற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். இதேவேளை, வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமையும் முன்பள்ளிகளை நடத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமையும் மேலதிக வகுப்புக்கள் மற்றும் விரிவுரைகளை நடத்த வேண்டாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது. எரிபொருள் கையிருப்பில் உள்ள போதிலும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நெருக்கடிகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.