• Apr 30 2025

மின்சாரக் கட்டணங்கள் தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அறிவிப்பு

IMF
Chithra / Apr 30th 2025, 11:31 am
image

 

இலங்கைக்கு மின்சார கட்டண திருத்தம் தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

செலவுகளை ஈடு செய்யும் வகையில் மின்சாரக் கட்டணங்கள் மறுசீரமைக்க வேண்டும் என இலங்கை அரசாங்கத்திற்கு வலியுறுத்துவதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிதி அபாயத்தை குறைக்க, இலங்கை மின்சாரச் செலவுகளை ஈடுகட்டும் வகையிலான கட்டணங்களை விரைவில் திருத்த வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு மின்சார கட்டணம் சரி செய்யப்படாவிட்டால், இலங்கை மின்சார சபையின் கடன் சுமை மேலும் அதிகரிக்கக்கூடும்.

அத்துடன் வரி செலுத்துவோர் மீது மேலும் அழுத்தம் கொடுக்கப்படலாம் என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

நாணய நிதியம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் நான்காவது மதிப்பாய்வை நிறைவேற்றுவது அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் கடன் சுமை அதிகரிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டால், எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

மின்சாரக் கட்டணங்கள் தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அறிவிப்பு  இலங்கைக்கு மின்சார கட்டண திருத்தம் தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.செலவுகளை ஈடு செய்யும் வகையில் மின்சாரக் கட்டணங்கள் மறுசீரமைக்க வேண்டும் என இலங்கை அரசாங்கத்திற்கு வலியுறுத்துவதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.நிதி அபாயத்தை குறைக்க, இலங்கை மின்சாரச் செலவுகளை ஈடுகட்டும் வகையிலான கட்டணங்களை விரைவில் திருத்த வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.இவ்வாறு மின்சார கட்டணம் சரி செய்யப்படாவிட்டால், இலங்கை மின்சார சபையின் கடன் சுமை மேலும் அதிகரிக்கக்கூடும்.அத்துடன் வரி செலுத்துவோர் மீது மேலும் அழுத்தம் கொடுக்கப்படலாம் என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.நாணய நிதியம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் நான்காவது மதிப்பாய்வை நிறைவேற்றுவது அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இலங்கை மின்சார சபையின் கடன் சுமை அதிகரிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டால், எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement