• Oct 11 2024

தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இலங்கை தமிழரசு கட்சியினரால் பிரசார பணிகள் முன்னெடுப்பு!

Tamil nila / Sep 16th 2024, 8:26 pm
image

Advertisement

தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளையினரால் பிரசார பணிகள் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டது.



இதனடிப்படையில் வட்டுக்கோட்டை, சங்கானை, பண்டத்தரிப்பு, காரைநகர், மாதகல் உட்பட்ட பகுதிகளில் பிரசார பணிகள் முன்னெடுக்கப்பட்டன.



இதன்பொழுது இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிகிளை தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் , இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிகிளை மகளிர் அணி, இளைஞர் அணியினர் கலந்து கொண்டனர்.

இதேவேளை, வட்டுக்கோட்டை மூளாய் வேரம் பகுதியில் நாளை செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில்  தொகுதிக்கிளையின் பிரசாரகூட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இலங்கை தமிழரசு கட்சியினரால் பிரசார பணிகள் முன்னெடுப்பு தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளையினரால் பிரசார பணிகள் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டது.இதனடிப்படையில் வட்டுக்கோட்டை, சங்கானை, பண்டத்தரிப்பு, காரைநகர், மாதகல் உட்பட்ட பகுதிகளில் பிரசார பணிகள் முன்னெடுக்கப்பட்டன.இதன்பொழுது இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிகிளை தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் , இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிகிளை மகளிர் அணி, இளைஞர் அணியினர் கலந்து கொண்டனர்.இதேவேளை, வட்டுக்கோட்டை மூளாய் வேரம் பகுதியில் நாளை செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில்  தொகுதிக்கிளையின் பிரசாரகூட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement