தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றதற்காக வாழ்த்து தெரிவித்த இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்திக்குத் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) பக்கத்தில் பதிலளித்துள்ள முதலமைச்சர் விஜய்,
"இலங்கை ஜனாதிபதி கௌரவ அநுர குமார திசாநாயக்க அவர்களின் வாழ்த்துக்களால் நான் மிகுந்த கௌரவமடைகிறேன். உங்களது அன்பான இந்தச் செயலுக்கு எனது நன்றிகள்" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு, கலாச்சாரம் மற்றும் வர்த்தக ரீதியாக ஆழமான பிணைப்பைக் கொண்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தனது வாழ்த்து செய்தியில், இலங்கையும் தமிழ்நாடும் இடையிலான நீண்டகால வரலாற்று, கலாசார மற்றும் மக்கள் தொடர்புகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருந்தார்.
“இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு, கலாசாரம், வர்த்தகம் மற்றும் தலைமுறைகள் கடந்த மக்கள் உறவுகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன,” என ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
மேலும், இலங்கையும் இந்தியாவும் இருதரப்பு உறவுகளையும் கூட்டாண்மையையும் தொடர்ந்து வலுப்படுத்தி வரும் நிலையில், எதிர்காலத்தில் “மிகப்பெரிய பொருளாதார வாய்ப்புகளும் முன்னேற்றங்களும்” உருவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற ஒரு சில நாட்களிலேயே, அண்டை நாட்டுத் தலைவரிடமிருந்து கிடைத்த வாழ்த்தும், அதற்கு முதலமைச்சர் அளித்துள்ள நாகரீகமான பதிலும் அரசியல் வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
வாழ்த்துக்களால் நான் மிகுந்த கௌரவமடைகிறேன். அநுரவுக்கு நன்றி தெரிவித்த தமிழக முதலமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றதற்காக வாழ்த்து தெரிவித்த இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்திக்குத் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) பக்கத்தில் பதிலளித்துள்ள முதலமைச்சர் விஜய், "இலங்கை ஜனாதிபதி கௌரவ அநுர குமார திசாநாயக்க அவர்களின் வாழ்த்துக்களால் நான் மிகுந்த கௌரவமடைகிறேன். உங்களது அன்பான இந்தச் செயலுக்கு எனது நன்றிகள்" எனத் தெரிவித்துள்ளார்.முன்னதாக, தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு, கலாச்சாரம் மற்றும் வர்த்தக ரீதியாக ஆழமான பிணைப்பைக் கொண்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தனது வாழ்த்து செய்தியில், இலங்கையும் தமிழ்நாடும் இடையிலான நீண்டகால வரலாற்று, கலாசார மற்றும் மக்கள் தொடர்புகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருந்தார்.“இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு, கலாசாரம், வர்த்தகம் மற்றும் தலைமுறைகள் கடந்த மக்கள் உறவுகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன,” என ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.மேலும், இலங்கையும் இந்தியாவும் இருதரப்பு உறவுகளையும் கூட்டாண்மையையும் தொடர்ந்து வலுப்படுத்தி வரும் நிலையில், எதிர்காலத்தில் “மிகப்பெரிய பொருளாதார வாய்ப்புகளும் முன்னேற்றங்களும்” உருவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற ஒரு சில நாட்களிலேயே, அண்டை நாட்டுத் தலைவரிடமிருந்து கிடைத்த வாழ்த்தும், அதற்கு முதலமைச்சர் அளித்துள்ள நாகரீகமான பதிலும் அரசியல் வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.