• Apr 14 2026

போரில் வெற்றி பெற அமெரிக்கா எவ்வளவு தூரத்திற்கும் செல்லும்! அதிரடி அறிவிப்பு

Chithra / Mar 9th 2026, 9:08 am
image


ஈரான் உடனான போரில் வெற்றி பெறுவதற்கு எவ்வளவு தூரம் செல்ல வேண்டுமோ, அவ்வளவு தூரம் செல்ல அமெரிக்கா தயாராக உள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார். 


ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 


ஒரு இராணுவ நடவடிக்கையில் எல்லைகள் என்ன என்பதை எதிரியிடமோ, ஊடகத்திடமோ அல்லது வேறு யாருடமோ வெளிப்படுத்தக் கூடாது. 


அமெரிக்கா வெற்றிக்காகப் போராடுகிறது, ஈரானின் சரணடைதலுக்கான நிபந்தனைகளை டொனால்ட் டிரம்ப் தீர்மானிப்பார். 


ஈரானால் போரிட முடியாது என்பது எங்களுக்குத் தெரியும். அவர்களுக்குத் தெரிந்தாலும் இல்லாவிட்டாலும், அவர்கள் போர்க்களத்தில் செயலற்றவர்களாகி, சரணடைவார்கள் என்று ஹெக்செத் குறிப்பிட்டார். 


மேலும், ஈரானின் கடற்படை பெரும்பாலும் அழிந்துவிட்டது என்றும், அது தொடர்ந்து வலுவிழந்து கொண்டே இருக்கும் என்றும் அவர் கூறினார். இது ஒரு ஆரம்பம் மட்டுமே என்று அவர் எச்சரித்துள்ளார்.

போரில் வெற்றி பெற அமெரிக்கா எவ்வளவு தூரத்திற்கும் செல்லும் அதிரடி அறிவிப்பு ஈரான் உடனான போரில் வெற்றி பெறுவதற்கு எவ்வளவு தூரம் செல்ல வேண்டுமோ, அவ்வளவு தூரம் செல்ல அமெரிக்கா தயாராக உள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ஒரு இராணுவ நடவடிக்கையில் எல்லைகள் என்ன என்பதை எதிரியிடமோ, ஊடகத்திடமோ அல்லது வேறு யாருடமோ வெளிப்படுத்தக் கூடாது. அமெரிக்கா வெற்றிக்காகப் போராடுகிறது, ஈரானின் சரணடைதலுக்கான நிபந்தனைகளை டொனால்ட் டிரம்ப் தீர்மானிப்பார். ஈரானால் போரிட முடியாது என்பது எங்களுக்குத் தெரியும். அவர்களுக்குத் தெரிந்தாலும் இல்லாவிட்டாலும், அவர்கள் போர்க்களத்தில் செயலற்றவர்களாகி, சரணடைவார்கள் என்று ஹெக்செத் குறிப்பிட்டார். மேலும், ஈரானின் கடற்படை பெரும்பாலும் அழிந்துவிட்டது என்றும், அது தொடர்ந்து வலுவிழந்து கொண்டே இருக்கும் என்றும் அவர் கூறினார். இது ஒரு ஆரம்பம் மட்டுமே என்று அவர் எச்சரித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement