வவுனியா வடக்கு பிரதேசத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய வீட்டுத்திட்டப் பணிகளை, பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணவேணி திருநாவுக்கரசு அவர்கள் நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.
வவுனியா வடக்கு பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட மூன்று வாழ்வாதார நிலையில் பின்தங்கிய குடும்பங்களுக்கு தலா 18 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சினால் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வீட்டுத்திட்டப் பணிகள் அனைத்தும் வவுனியா வடக்கு பிரதேச சபையின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் மிகக் கவனமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது கட்டுமானப் பணிகள் பல்வேறு கட்டங்களில் நடைபெற்று வரும் நிலையில், அவற்றின் தரம் மற்றும் முன்னேற்றம் குறித்து கேட்டறிவதற்காக தவிசாளர் அவர்கள் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
வவுனியா வடக்கு பிரதேசத்தின் உட்கட்டமைப்பு மற்றும் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
வவுனியா வடக்கில் ரூ. 18 இலட்சம் பெறுமதியான வீட்டுத்திட்டங்கள்: தவிசாளர் நேரில் ஆய்வு வவுனியா வடக்கு பிரதேசத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய வீட்டுத்திட்டப் பணிகளை, பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணவேணி திருநாவுக்கரசு அவர்கள் நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.வவுனியா வடக்கு பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட மூன்று வாழ்வாதார நிலையில் பின்தங்கிய குடும்பங்களுக்கு தலா 18 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சினால் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்த வீட்டுத்திட்டப் பணிகள் அனைத்தும் வவுனியா வடக்கு பிரதேச சபையின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் மிகக் கவனமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.தற்போது கட்டுமானப் பணிகள் பல்வேறு கட்டங்களில் நடைபெற்று வரும் நிலையில், அவற்றின் தரம் மற்றும் முன்னேற்றம் குறித்து கேட்டறிவதற்காக தவிசாளர் அவர்கள் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.வவுனியா வடக்கு பிரதேசத்தின் உட்கட்டமைப்பு மற்றும் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.