யாழ்ப்பாணத்தில் 8 வயது சிறுமி ஒருவர் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்கு பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்பக் தகவல்களின் படி, சிறுமியின் தாய்வழி உறவினரான 21 வயதுடைய இளைஞன் இந்தக் குற்றச்செயலில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படுகிறார்.
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.
யாழில் 8 வயது சிறுமிக்கு நடந்த பயங்கரம் - தாய்வழி உறவினரின் அதிர்ச்சிச் செயல் யாழ்ப்பாணத்தில் 8 வயது சிறுமி ஒருவர் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்கு பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஆரம்பக் தகவல்களின் படி, சிறுமியின் தாய்வழி உறவினரான 21 வயதுடைய இளைஞன் இந்தக் குற்றச்செயலில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படுகிறார்.சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இதேவேளை, பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.