அங்குருவாதொட்ட, படகொட பகுதியில் அரச அனுமதி இன்றி சட்டவிரோதமாக இயங்கி வந்த தனியார் முதியோர் மற்றும் மனநல பராமரிப்பு இல்லத்தில் நேற்றிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இல்லத்தின் நீர் மோட்டார் மற்றும் மல்டி பிளக் ஒன்றில் ஏற்பட்ட மின் கசிவு, அருகில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 80 மெத்தைகளில் பரவியதே இந்த விபத்திற்குக் காரணம் என அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
விபத்தின் போது வளாகத்தில் இருந்த 70 மனநல நோயாளர்களில் 52 பேர் பொதுமக்கள் மற்றும் பொலிஸாரால் காயங்களின்றி மீட்கப்பட்டனர். எனினும், 10 பேர் சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்ததுடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மீட்கப்பட்டவர்கள் இராணுவ உதவியுடன் கல்பாத பகுதியிலுள்ள மாற்று இல்லத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் உபாலி பன்னிலகே, இந்த இல்லம் எந்தவொரு அரச நிறுவனத்திலும் பதிவு செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.
இதனையடுத்து, பாதுகாப்பு நடைமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இல்லத்தின் பணிப்பாளரை ஜூன் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஹொரணை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொலிஸார் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹொரணை முதியோர் இல்ல தீ விபத்து கொடூரம்: முறையான அனுமதியின்றி இயங்கியது அம்பலம் அங்குருவாதொட்ட, படகொட பகுதியில் அரச அனுமதி இன்றி சட்டவிரோதமாக இயங்கி வந்த தனியார் முதியோர் மற்றும் மனநல பராமரிப்பு இல்லத்தில் நேற்றிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.இல்லத்தின் நீர் மோட்டார் மற்றும் மல்டி பிளக் ஒன்றில் ஏற்பட்ட மின் கசிவு, அருகில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 80 மெத்தைகளில் பரவியதே இந்த விபத்திற்குக் காரணம் என அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.விபத்தின் போது வளாகத்தில் இருந்த 70 மனநல நோயாளர்களில் 52 பேர் பொதுமக்கள் மற்றும் பொலிஸாரால் காயங்களின்றி மீட்கப்பட்டனர். எனினும், 10 பேர் சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்ததுடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மீட்கப்பட்டவர்கள் இராணுவ உதவியுடன் கல்பாத பகுதியிலுள்ள மாற்று இல்லத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் உபாலி பன்னிலகே, இந்த இல்லம் எந்தவொரு அரச நிறுவனத்திலும் பதிவு செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தினார். இதனையடுத்து, பாதுகாப்பு நடைமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இல்லத்தின் பணிப்பாளரை ஜூன் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஹொரணை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொலிஸார் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.