• Sep 07 2026

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம் – பெறுபேறுகள் எப்போது?

Chithra / Sep 6th 2026, 1:50 pm
image


கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.


விடைத்தாள்கள் மதிப்பீட்டுப் பணிகள் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளதுடன், எதிர்வரும் ஒக்டோபர் 25ஆம் திகதிக்குள் அவற்றை முழுமையாக நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


இதேவேளை, உயர்தரப் பரீட்சைக்கான செய்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் செப்டம்பர் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஆகஸ்ட் 10ஆம் திகதி ஆரம்பமான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை, நேற்று (05) நிறைவடைந்தது. இம்முறை பரீட்சைக்கு 372,310 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.


விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்த பின்னர், 2026ஆம் ஆண்டின் இறுதிப் பகுதிக்குள் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம் – பெறுபேறுகள் எப்போது கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.விடைத்தாள்கள் மதிப்பீட்டுப் பணிகள் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளதுடன், எதிர்வரும் ஒக்டோபர் 25ஆம் திகதிக்குள் அவற்றை முழுமையாக நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இதேவேளை, உயர்தரப் பரீட்சைக்கான செய்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் செப்டம்பர் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆகஸ்ட் 10ஆம் திகதி ஆரம்பமான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை, நேற்று (05) நிறைவடைந்தது. இம்முறை பரீட்சைக்கு 372,310 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்த பின்னர், 2026ஆம் ஆண்டின் இறுதிப் பகுதிக்குள் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement