• Nov 21 2025

சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் ஈகைச் சுடரேற்றலுடன் ஆரம்பமான மாவீரர் வாரம்!

Chithra / Nov 21st 2025, 12:59 pm
image


தேச விடுதலைக்காக போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் தமிழ் தேசிய மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நிகள்வுகள் இன்று வேலணை சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்றது.

சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தின் தீவக நினைவேந்தல் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இன்று ஈகச் சுடரேற்றப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இன்று 21 ஆம் திகதி ஆரம்பமாகும் குறித்த மாவீரர் வாரம் எதிர்வரும் 27 ஆம் திகதி மாலை 6.00 மணியளவில் நூற்றுக்கணக்கான உறவுகளின் பங்கேற்புடன் இறுதி நாள் நிகழ்வுகள்  உணர்வுபூர்வமாக இடம்பெறவுள்ளது.


இதனிடையே நாளை காலை 9.30 மணியளவில் தீவகத்தில் வாழும் மாவீரர்களின் உறவுகள் மதிப்பளித்து கௌரவம் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் பொது விளையாட்டரங்கின் திறந்தவெளி அரங்கில் குறித்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் ஈகைச் சுடரேற்றலுடன் ஆரம்பமான மாவீரர் வாரம் தேச விடுதலைக்காக போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் தமிழ் தேசிய மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நிகள்வுகள் இன்று வேலணை சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்றது.சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தின் தீவக நினைவேந்தல் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இன்று ஈகச் சுடரேற்றப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.இன்று 21 ஆம் திகதி ஆரம்பமாகும் குறித்த மாவீரர் வாரம் எதிர்வரும் 27 ஆம் திகதி மாலை 6.00 மணியளவில் நூற்றுக்கணக்கான உறவுகளின் பங்கேற்புடன் இறுதி நாள் நிகழ்வுகள்  உணர்வுபூர்வமாக இடம்பெறவுள்ளது.இதனிடையே நாளை காலை 9.30 மணியளவில் தீவகத்தில் வாழும் மாவீரர்களின் உறவுகள் மதிப்பளித்து கௌரவம் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.ஊர்காவற்றுறை பிரதேச சபையின் பொது விளையாட்டரங்கின் திறந்தவெளி அரங்கில் குறித்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement