• Aug 02 2026

நுவரெலியாவில் கனத்த மழை !

Ziya / Aug 1st 2026, 11:58 am
image

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா நோட்டன் பகுதியில் கனமழை நேற்று மதியம் முதல் பெய்து வருகிறது.


இதன் காரணமாக மலையக பகுதியில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.


இன்று காலை முதல் விமல் சுரேந்திர நீர் தேக்கத்தின் நீர் நிரம்பி மதகு வழியாக நீர் வெளியேற்றமாகிறது.மேலும் மவுசாகலை கென்யோன் புரோட்லேன்ட் லக்சபான பொல்பிட்டிய நவலக்சபான கலுகல காசல்ரீ ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.


இவ்வாறு தொடர்ந்து கன மழை பெய்யும் பட்சத்தில் பல நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கும் நிலை ஏற்படும் என நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


இதன் காரணமாக தாழ் நில பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளபடுகின்றனர்.


நுவரெலியாவில் கனத்த மழை மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா நோட்டன் பகுதியில் கனமழை நேற்று மதியம் முதல் பெய்து வருகிறது.இதன் காரணமாக மலையக பகுதியில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.இன்று காலை முதல் விமல் சுரேந்திர நீர் தேக்கத்தின் நீர் நிரம்பி மதகு வழியாக நீர் வெளியேற்றமாகிறது.மேலும் மவுசாகலை கென்யோன் புரோட்லேன்ட் லக்சபான பொல்பிட்டிய நவலக்சபான கலுகல காசல்ரீ ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.இவ்வாறு தொடர்ந்து கன மழை பெய்யும் பட்சத்தில் பல நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கும் நிலை ஏற்படும் என நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக தாழ் நில பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளபடுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement