யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மாமுனை சந்தி பகுதியில் இன்றைய தினம் 4:30 மணியளவில் வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
மருதங்கேணியில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த குறித்த வாகனம் மாமுனை சந்தி பகுதியில் நிறுத்தி இருந்த வாகனத்தின் மீது மோதி வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது வாகனத்தில் பயணித்தவர்களுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்கு சென்றிருந்த மருதங்கேணி போக்குவரத்து பொலிசார் விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த விபத்து நடந்த பகுதியில் உரிய வீதி குறியீடுகள் இல்லை என்பதாலையே இந்த பகுதியில் அதிகளவான விபத்துக்கள் இடம்பெற்றுவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்து ஹயேஸ் விபத்து யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மாமுனை சந்தி பகுதியில் இன்றைய தினம் 4:30 மணியளவில் வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், மருதங்கேணியில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த குறித்த வாகனம் மாமுனை சந்தி பகுதியில் நிறுத்தி இருந்த வாகனத்தின் மீது மோதி வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.விபத்தின் போது வாகனத்தில் பயணித்தவர்களுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்கு சென்றிருந்த மருதங்கேணி போக்குவரத்து பொலிசார் விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த விபத்து நடந்த பகுதியில் உரிய வீதி குறியீடுகள் இல்லை என்பதாலையே இந்த பகுதியில் அதிகளவான விபத்துக்கள் இடம்பெற்றுவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.