பாடசாலையில் மாணவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஆசரியர் ஒருவர், 8 மாணவர்கள் என 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் துருக்கியில் உள்ள ஒரு நடுநிலைப் பாடசாலையில் நேற்று (15) இடம்பெறறுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துருக்கியில் துப்பாக்கி உரிமம் பெறுவதற்கான சட்டங்கள் கடுமையாக உள்ளன. அதேபோல் பாடசாலைகளில் துப்பாக்கிச்சூடு நடப்பது மிகவும் அரிதான செயல்.
எனினும் கடந்த 2 நாள்களில் தொடர்ச்சியாக நடைபெற்ற 2 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கஹ்ரமன்மராஸ் மாகாணத்தில் உள்ள பாடசாலையில் பயின்று வரும் 8 ஆம் வகுப்பு மாணவன், ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரியான தனது தந்தையின் 5 துப்பாக்கிகள் மற்றும் 7 தோட்டாபெட்டிகளைப் புத்தகப்பையில் மறைத்து பாடசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
பாடசாலையில் 5 ஆம் வகுப்பு நடைபெறும் 2 வகுப்பறைகளுக்குள் நுழைந்து, கண்மூடித்தனமாகச் சுட்டதில் இந்த உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன. தாக்குதலுக்குப் பிறகு அந்த மாணவனும் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிர்மாய்த்துள்ளார்.
இது தொடர்பாக மாணவனின் தந்தை கைதுசெய்யப்பட்டு அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
துப்பாக்கிச்சூடு குறித்த அதிர்ச்சியூட்டும் காணொளிகளை ஊடகங்கள் ஒளிபரப்பத் துருக்கி அரசு தடை விதித்துள்ளது. தாக்குதல் குறித்து துருக்கி உள்துறை அமைச்சர் முஸ்தபா சிஃப்ட்சி தெரிவிக்கையில்,
‘காயமடைந்த 13 பேரில் 6 பேரின் நிலைமைக் கவலைக்கிடமாக உள்ளது. இது அந்த மாணவன் தனிப்பட்ட விரக்தியில் நடத்திய தாக்குதலே தவிர, பயங்கரவாதச் செயல் அல்ல’ என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக செவ்வாய்க்கிழமையன்று, சன்லியுா்ஃபா மாகாணத்தில் உள்ள ஒரு உயர்நிலைப் பாடசாலையில் முன்னாள் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள், ஆசிரியர்கள் என 16 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய அந்த நபரும் உயிர்மாய்த்தமை குறிப்பிடத்தக்கது.
புத்தகப்பையில் துப்பாக்கிகள் - இரத்த வெள்ளமான வகுப்பறை; துருக்கியில் மாணவன் நடத்திய பயங்கரம் பாடசாலையில் மாணவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஆசரியர் ஒருவர், 8 மாணவர்கள் என 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் துருக்கியில் உள்ள ஒரு நடுநிலைப் பாடசாலையில் நேற்று (15) இடம்பெறறுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். துருக்கியில் துப்பாக்கி உரிமம் பெறுவதற்கான சட்டங்கள் கடுமையாக உள்ளன. அதேபோல் பாடசாலைகளில் துப்பாக்கிச்சூடு நடப்பது மிகவும் அரிதான செயல். எனினும் கடந்த 2 நாள்களில் தொடர்ச்சியாக நடைபெற்ற 2 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.கஹ்ரமன்மராஸ் மாகாணத்தில் உள்ள பாடசாலையில் பயின்று வரும் 8 ஆம் வகுப்பு மாணவன், ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரியான தனது தந்தையின் 5 துப்பாக்கிகள் மற்றும் 7 தோட்டாபெட்டிகளைப் புத்தகப்பையில் மறைத்து பாடசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.பாடசாலையில் 5 ஆம் வகுப்பு நடைபெறும் 2 வகுப்பறைகளுக்குள் நுழைந்து, கண்மூடித்தனமாகச் சுட்டதில் இந்த உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன. தாக்குதலுக்குப் பிறகு அந்த மாணவனும் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிர்மாய்த்துள்ளார். இது தொடர்பாக மாணவனின் தந்தை கைதுசெய்யப்பட்டு அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.துப்பாக்கிச்சூடு குறித்த அதிர்ச்சியூட்டும் காணொளிகளை ஊடகங்கள் ஒளிபரப்பத் துருக்கி அரசு தடை விதித்துள்ளது. தாக்குதல் குறித்து துருக்கி உள்துறை அமைச்சர் முஸ்தபா சிஃப்ட்சி தெரிவிக்கையில், ‘காயமடைந்த 13 பேரில் 6 பேரின் நிலைமைக் கவலைக்கிடமாக உள்ளது. இது அந்த மாணவன் தனிப்பட்ட விரக்தியில் நடத்திய தாக்குதலே தவிர, பயங்கரவாதச் செயல் அல்ல’ என குறிப்பிட்டுள்ளார்.முன்னதாக செவ்வாய்க்கிழமையன்று, சன்லியுா்ஃபா மாகாணத்தில் உள்ள ஒரு உயர்நிலைப் பாடசாலையில் முன்னாள் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள், ஆசிரியர்கள் என 16 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய அந்த நபரும் உயிர்மாய்த்தமை குறிப்பிடத்தக்கது.