• May 04 2026

தப்பியோட முயன்ற கைதிகள் மீது துப்பாக்கிச் சூடு; காலி மற்றும் கல்கமுவவில் பரபரப்பு

Chithra / May 4th 2026, 9:05 am
image

நாட்டின் இரு வேறு பகுதிகளில்  நேற்று பொலிஸ் மற்றும் சிறைச்சாலை காவலில் இருந்து தப்பியோட முயன்ற கைதிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.


காலி சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரு கைதிகள் நேற்று பிற்பகல் தப்பியோட முயன்ற போது அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.


போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த இருவரே இவ்வாறு தப்பியோட முற்பட்டுள்ளனர்.


சிறைச்சாலை அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு கைதியின் தோள்பட்டை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த கைதி உடனடியாக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இதேவேளை  கல்கமுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக நபர் ஒருவர், 

பொலிஸ் காவலில் இருந்து தப்பியோட முயன்ற போது நேற்று மதியம் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.


போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் ஜீப் வண்டியில் ஏற்ற முற்பட்ட போது, விலங்கிடப்பட்டிருந்த இருவர் பொலிஸ் நிலைய நுழைவாயிலில் இருந்து சுமார் 75 மீற்றர் தூரம் ஓடி தப்பிக்க முயன்றுள்ளனர்.


இதன்போது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவரின் முழங்காலுக்குக் கீழ் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.


காயமடைந்தவர் கல்கமுவ, கோஜராகம பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 


கல்கமுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


சம்பவம் இடம்பெற்ற போது இரு சந்தேக நபர்களினதும் கைகள் இணைக்கப்பட்டு கைவிலங்கிடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 


இந்த இரு சம்பவங்கள் குறித்தும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. 

தப்பியோட முயன்ற கைதிகள் மீது துப்பாக்கிச் சூடு; காலி மற்றும் கல்கமுவவில் பரபரப்பு நாட்டின் இரு வேறு பகுதிகளில்  நேற்று பொலிஸ் மற்றும் சிறைச்சாலை காவலில் இருந்து தப்பியோட முயன்ற கைதிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.காலி சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரு கைதிகள் நேற்று பிற்பகல் தப்பியோட முயன்ற போது அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த இருவரே இவ்வாறு தப்பியோட முற்பட்டுள்ளனர்.சிறைச்சாலை அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு கைதியின் தோள்பட்டை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த கைதி உடனடியாக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதேவேளை  கல்கமுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக நபர் ஒருவர், பொலிஸ் காவலில் இருந்து தப்பியோட முயன்ற போது நேற்று மதியம் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் ஜீப் வண்டியில் ஏற்ற முற்பட்ட போது, விலங்கிடப்பட்டிருந்த இருவர் பொலிஸ் நிலைய நுழைவாயிலில் இருந்து சுமார் 75 மீற்றர் தூரம் ஓடி தப்பிக்க முயன்றுள்ளனர்.இதன்போது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவரின் முழங்காலுக்குக் கீழ் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.காயமடைந்தவர் கல்கமுவ, கோஜராகம பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கல்கமுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.சம்பவம் இடம்பெற்ற போது இரு சந்தேக நபர்களினதும் கைகள் இணைக்கப்பட்டு கைவிலங்கிடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த இரு சம்பவங்கள் குறித்தும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement