• Jul 23 2026

தேவேந்திரமுனையில் மீனவர் வீடு மீது துப்பாக்கிச் சூடு; மர்ம நபர்கள் தப்பியோட்டம்

Chithra / Jul 22nd 2026, 7:19 am
image


மாத்தறை - தேவேந்திரமுனை, கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏதண்ட வீதியில் அமைந்துள்ள மீனவர் ஒருவரின் வீடு மீது இன்று (22) அதிகாலை மர்ம நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பொலிஸாரின் தகவலின்படி, கார் ஒன்றில் வந்த சிலர் கைத்துப்பாக்கி மூலம் வீட்டை இலக்காகக் கொண்டு  துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.


இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் அல்லது உயிர்ச் சேதம் ஏற்படவில்லை என்றும், வீட்டுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக கந்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தேவேந்திரமுனையில் மீனவர் வீடு மீது துப்பாக்கிச் சூடு; மர்ம நபர்கள் தப்பியோட்டம் மாத்தறை - தேவேந்திரமுனை, கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏதண்ட வீதியில் அமைந்துள்ள மீனவர் ஒருவரின் வீடு மீது இன்று (22) அதிகாலை மர்ம நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பொலிஸாரின் தகவலின்படி, கார் ஒன்றில் வந்த சிலர் கைத்துப்பாக்கி மூலம் வீட்டை இலக்காகக் கொண்டு  துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் அல்லது உயிர்ச் சேதம் ஏற்படவில்லை என்றும், வீட்டுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக கந்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement