சிலாபத்தில் அமைந்துள்ள தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற சிறுவர்கள் இருவர் உட்பட ஐந்து பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த துயர சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
கிரிபத்கொட பிரதேசத்தில் இருந்து சுற்றுலா சென்ற குழுவில் இருந்த 10 பேர், நேற்று பிற்பகல் தெதுரு ஓயாவின் பாலத்தின் கீழ் குளித்துக் கொண்டிருந்த போது இந்த அனர்த்தம் ஏற்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது ஐந்து பேர் நீரில் மூழ்கியுள்ளனர். அவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் மாகொல மற்றும் கிரேண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 12, 16, 19 மற்றும் 27 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் உயிர் பிழைத்த சிறுவன் தெரிவிக்கையில்,
“முதலில் மாரவில தேவாலயத்தை பார்வையிட வந்தோம். பின்னர் முன்னேஸ்வரன் ஆலயத்திற்கு சென்று இங்கு வந்து சாப்பிட்ட பின்னர் குளித்தோம். அதிக தண்ணீர் இல்லை. எனினும் நான் ஒரு அடி கால் வைத்தவுடன் இழுத்து செல்லப்பட்டேன். மூத்த சகோதரர் என்னை இழுத்து காப்பாற்றினார். ஏனையவர்களை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பகுதி பாதுகாப்பற்ற இடம் என ஒரு பெரிய பலகை வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கிடையில், ஆறுகள், குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களில் குளிக்கும் போது ஏற்படும் விபத்துக்களால் மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அண்மைக் காலத்தில் அதிகமாகப் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் நடந்த பெருந்துயர்; ஐவர் பலி உயிர்பிழைத்த சிறுவனின் வாக்குமூலம் சிலாபத்தில் அமைந்துள்ள தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற சிறுவர்கள் இருவர் உட்பட ஐந்து பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த துயர சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. கிரிபத்கொட பிரதேசத்தில் இருந்து சுற்றுலா சென்ற குழுவில் இருந்த 10 பேர், நேற்று பிற்பகல் தெதுரு ஓயாவின் பாலத்தின் கீழ் குளித்துக் கொண்டிருந்த போது இந்த அனர்த்தம் ஏற்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது ஐந்து பேர் நீரில் மூழ்கியுள்ளனர். அவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் மாகொல மற்றும் கிரேண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 12, 16, 19 மற்றும் 27 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சம்பவத்தில் உயிர் பிழைத்த சிறுவன் தெரிவிக்கையில், “முதலில் மாரவில தேவாலயத்தை பார்வையிட வந்தோம். பின்னர் முன்னேஸ்வரன் ஆலயத்திற்கு சென்று இங்கு வந்து சாப்பிட்ட பின்னர் குளித்தோம். அதிக தண்ணீர் இல்லை. எனினும் நான் ஒரு அடி கால் வைத்தவுடன் இழுத்து செல்லப்பட்டேன். மூத்த சகோதரர் என்னை இழுத்து காப்பாற்றினார். ஏனையவர்களை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.அந்தப் பகுதி பாதுகாப்பற்ற இடம் என ஒரு பெரிய பலகை வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இதற்கிடையில், ஆறுகள், குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களில் குளிக்கும் போது ஏற்படும் விபத்துக்களால் மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அண்மைக் காலத்தில் அதிகமாகப் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.