வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் செயல்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்கள் தொடர்பாக, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோவுடன் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார்.
இந்த விசேட சந்திப்பு நேற்று (24.04.2026) வெள்ளிக்கிழமை இரவு ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இச் சந்திப்பில் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் இன்னமும் உட்கட்டமைப்பு தேவைகள் அதிகமாக இருப்பதை ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, வன்னிப் பகுதிகளில் உள்ள கிராமங்களை இணைக்கும் சாலைகள் மோசமான நிலையில் இருப்பதால் அவற்றை விரைவாக புனரமைக்க கூடுதல் நிதி அவசியம் என வலியுறுத்தினார்.
மேலும், கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான பயண நேரத்தை குறைக்கும் நோக்கில் அதிவேக நெடுஞ்சாலை திட்டங்கள் மற்றும் மாற்று போக்குவரத்து தீர்வுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
அதேவேளை, அண்மைய ‘டித்வா’ பேரிடர் பாதிப்புகளுக்கான மீள்கட்டுமான பணிகளுக்கு வழங்கப்பட்ட நிதியை தாமதமின்றி பயன்படுத்தி திட்டங்களை இந்த ஆண்டுக்குள் நிறைவு செய்ய வேண்டும் என பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.
இந்த கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வடக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆளுநர் – பிரதி அமைச்சர் முக்கிய கலந்துரையாடல் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் செயல்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்கள் தொடர்பாக, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோவுடன் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார்.இந்த விசேட சந்திப்பு நேற்று (24.04.2026) வெள்ளிக்கிழமை இரவு ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.இச் சந்திப்பில் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் இன்னமும் உட்கட்டமைப்பு தேவைகள் அதிகமாக இருப்பதை ஆளுநர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, வன்னிப் பகுதிகளில் உள்ள கிராமங்களை இணைக்கும் சாலைகள் மோசமான நிலையில் இருப்பதால் அவற்றை விரைவாக புனரமைக்க கூடுதல் நிதி அவசியம் என வலியுறுத்தினார்.மேலும், கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான பயண நேரத்தை குறைக்கும் நோக்கில் அதிவேக நெடுஞ்சாலை திட்டங்கள் மற்றும் மாற்று போக்குவரத்து தீர்வுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.அதேவேளை, அண்மைய ‘டித்வா’ பேரிடர் பாதிப்புகளுக்கான மீள்கட்டுமான பணிகளுக்கு வழங்கப்பட்ட நிதியை தாமதமின்றி பயன்படுத்தி திட்டங்களை இந்த ஆண்டுக்குள் நிறைவு செய்ய வேண்டும் என பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.இந்த கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.