• May 17 2026

ஒரே நாளில் இரு தடவை வீழ்ச்சியடைந்த தங்கம்!

shanu / Mar 23rd 2026, 4:44 pm
image

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்திற்கு மத்தியில், இன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இரு தடவைகள் அதிரடி மாற்றங்களைக் கண்டுள்ளது. 


அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,371 டொலராக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு அவுண்ஸ் 65.62 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.


சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை பாரிய சரிவை சந்தித்ததையடுத்து இலங்கையிலும் தங்கத்தின் விலை கடந்த வாரங்களுடன் ஒப்பிடுகையில் இன்று காலை  8,000 ரூபாவால் குறைந்தது. 


அதன்படி, இலங்கையில் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 370,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 340,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. 


இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,550 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. 


இந்த நிலையில் மீண்டும் இன்று மதியம் இரண்டாவது முறையாக தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது.


அதன்படி, தற்போதைய நிலவரப்படி  24 கரட் தங்கம் ஒரு பவுண்  5,000 ரூபாவால் குறைந்து 365,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் ஒரு பவுண் 46000 ரூபாவால் குறைந்தும் பவுண் ஒன்று 335,800 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகின்றது.


இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,625 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41,975 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகின்றது.


நிலவும் போர்ச்சூழலுக்கு மத்தியில் ஒரே நாளில் இரு தடவைகள் தங்கம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரே நாளில் இரு தடவை வீழ்ச்சியடைந்த தங்கம் மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்திற்கு மத்தியில், இன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இரு தடவைகள் அதிரடி மாற்றங்களைக் கண்டுள்ளது. அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,371 டொலராக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு அவுண்ஸ் 65.62 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை பாரிய சரிவை சந்தித்ததையடுத்து இலங்கையிலும் தங்கத்தின் விலை கடந்த வாரங்களுடன் ஒப்பிடுகையில் இன்று காலை  8,000 ரூபாவால் குறைந்தது. அதன்படி, இலங்கையில் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 370,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 340,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,550 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் இன்று மதியம் இரண்டாவது முறையாக தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது.அதன்படி, தற்போதைய நிலவரப்படி  24 கரட் தங்கம் ஒரு பவுண்  5,000 ரூபாவால் குறைந்து 365,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் ஒரு பவுண் 46000 ரூபாவால் குறைந்தும் பவுண் ஒன்று 335,800 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகின்றது.இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,625 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41,975 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகின்றது.நிலவும் போர்ச்சூழலுக்கு மத்தியில் ஒரே நாளில் இரு தடவைகள் தங்கம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement