• May 13 2025

காதலன்,நண்பன், சித்தப்பாவினால் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட சிறுமி!- சினிமாவை மிஞ்சும் சம்பவம்

Thansita / May 12th 2025, 11:40 pm
image

யாழ்ப்பாணம் இளவாலையைச் சேர்ந்த சிறுமியொருவர் தனது காதலனாலும் காதலனின் நண்பனாலும் பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டு ஏமாந்து பின்னர் சித்தப்பாவிடம் தஞ்சமடைந்த நிலையில் சித்தப்பாவும் மீண்டும் பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது

குறித்த விடயம் தொடர்பில்  மேலும் தெரியவருகையில் 

இளவாலையைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமியொருவர் கடந்த 4 நாட்களாக வீட்டிலிருந்து காணாமல் போயிருந்தார். இது தொடர்பாக சிறுமியின் தந்தை இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார் 

தொடர்ந்து கிளிநொச்சியில் உள்ள சிறுமியின் சித்தப்பா குடும்பத்தினர் குறித்த சிறுமி தமது வீட்டில் தங்கியிருந்த நிலையில் அங்கிருந்தும் காணாமல் போயுள்ளதாக  கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்

தனது மகள் காணாமல் போன விவகாரத்தில் தனது தம்பிக்கும் தொடர்பிருப்பதாக தந்தையின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்ட்டுள்ளது. இதனடிப்படையில் சித்தப்பாவையும் பொலிஸார் விசாரணைக்கு அழைத்திருந்தனர்

இதற்கிடையில் சிறுமி கிளிநொச்சி கனகபுரத்தில் தங்கியிருந்ததாகவும் அதிகாலை 3. 30மணியளவில் திடீரென காணாமல் போயுள்ளதாகவும் சிறுமியின் சித்தி கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார் 

இந்நிலையில் நேற்று சிறுமி திரும்பி வந்ததாக குறிப்பிட்டு சிதத்தப்பா கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு சிறுமியை அழைத்துச் சென்றார்

சிறுமி காணாமல் போன முறைப்பாடு இளவாலை பொலிஸ் நிலையத்தில் உள்ளதால் சிறுமியை அங்கு அனுப்பி வைத்தனர்

இளவாலை பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில்,

வீட்டில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து சிறுமி  கிளிநொச்சியிலுள்ள சித்தப்பாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். 

மேலும் சித்தப்பா வீட்டில் தங்கியிருந்த தகவலை  சிறுமி தனது காதலனுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.  காதலனின் அறிவுறுத்தலின்படி  அதிகாலை 3.30மணியளவில் சித்தப்பாவின் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

அதேநேரம்  தனது நண்பனுடன் முச்சக்கர வண்டியில் வந்த காதலன் சிறுமியை ஏற்றிக்கொண்டு சென்று பூநகரிப்பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கவைத்து பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியுள்ளார்

பின்னர் முச்சக்கரவண்டியில் வந்த நன்பனும் பாலியல் வல்லுறவிற்குட்படுத்தியுள்ளான் 

பின்னர் முச்சக்கர வண்டியில் சிறுமியை அழைத்துச் சென்று யாழ்ப்பாணம் கைதடியில் இறக்கியதுடன் 1000 ரூபா பணத்தை கொடுத்து பேருந்தில் வீடு செல்லுமாறு கூறியுள்ளனர். 

அடுத்து எங்கு போவது எனத் தெரியாத சிறுமி மீண்டும் பேருந்தில் சித்தப்பாவின் வீட்டிற்கே சென்றுள்ளார் அங்கு சித்தப்பாவும் தன்னை பலமுறை பாலியல் வல்லுறவிற்குட்படுத்தியதாக சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார். 

இந்த கொடூர சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

காதலன்,நண்பன், சித்தப்பாவினால் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட சிறுமி- சினிமாவை மிஞ்சும் சம்பவம் யாழ்ப்பாணம் இளவாலையைச் சேர்ந்த சிறுமியொருவர் தனது காதலனாலும் காதலனின் நண்பனாலும் பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டு ஏமாந்து பின்னர் சித்தப்பாவிடம் தஞ்சமடைந்த நிலையில் சித்தப்பாவும் மீண்டும் பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுகுறித்த விடயம் தொடர்பில்  மேலும் தெரியவருகையில் இளவாலையைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமியொருவர் கடந்த 4 நாட்களாக வீட்டிலிருந்து காணாமல் போயிருந்தார். இது தொடர்பாக சிறுமியின் தந்தை இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார் தொடர்ந்து கிளிநொச்சியில் உள்ள சிறுமியின் சித்தப்பா குடும்பத்தினர் குறித்த சிறுமி தமது வீட்டில் தங்கியிருந்த நிலையில் அங்கிருந்தும் காணாமல் போயுள்ளதாக  கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்தனது மகள் காணாமல் போன விவகாரத்தில் தனது தம்பிக்கும் தொடர்பிருப்பதாக தந்தையின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்ட்டுள்ளது. இதனடிப்படையில் சித்தப்பாவையும் பொலிஸார் விசாரணைக்கு அழைத்திருந்தனர்இதற்கிடையில் சிறுமி கிளிநொச்சி கனகபுரத்தில் தங்கியிருந்ததாகவும் அதிகாலை 3. 30மணியளவில் திடீரென காணாமல் போயுள்ளதாகவும் சிறுமியின் சித்தி கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார் இந்நிலையில் நேற்று சிறுமி திரும்பி வந்ததாக குறிப்பிட்டு சிதத்தப்பா கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு சிறுமியை அழைத்துச் சென்றார்சிறுமி காணாமல் போன முறைப்பாடு இளவாலை பொலிஸ் நிலையத்தில் உள்ளதால் சிறுமியை அங்கு அனுப்பி வைத்தனர்இளவாலை பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில்,வீட்டில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து சிறுமி  கிளிநொச்சியிலுள்ள சித்தப்பாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும் சித்தப்பா வீட்டில் தங்கியிருந்த தகவலை  சிறுமி தனது காதலனுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.  காதலனின் அறிவுறுத்தலின்படி  அதிகாலை 3.30மணியளவில் சித்தப்பாவின் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.அதேநேரம்  தனது நண்பனுடன் முச்சக்கர வண்டியில் வந்த காதலன் சிறுமியை ஏற்றிக்கொண்டு சென்று பூநகரிப்பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கவைத்து பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியுள்ளார்பின்னர் முச்சக்கரவண்டியில் வந்த நன்பனும் பாலியல் வல்லுறவிற்குட்படுத்தியுள்ளான் பின்னர் முச்சக்கர வண்டியில் சிறுமியை அழைத்துச் சென்று யாழ்ப்பாணம் கைதடியில் இறக்கியதுடன் 1000 ரூபா பணத்தை கொடுத்து பேருந்தில் வீடு செல்லுமாறு கூறியுள்ளனர். அடுத்து எங்கு போவது எனத் தெரியாத சிறுமி மீண்டும் பேருந்தில் சித்தப்பாவின் வீட்டிற்கே சென்றுள்ளார் அங்கு சித்தப்பாவும் தன்னை பலமுறை பாலியல் வல்லுறவிற்குட்படுத்தியதாக சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த கொடூர சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement